எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கல்லறைக்குள் கதறல் முத்தாய் உனை ஈன்று முத்தார மாய்...

      கல்லறைக்குள் கதறல்

முத்தாய் உனை ஈன்று
முத்தார மாய் வளர்த்து
மாணிக்க தொட்டியி லிட்டு
மகனே உனை வளர்த்தேனே!

உடன் பிறந்த சகோவை
உபாதை யென எண்ணாது
உயிராய் எண்ணிடு என்றுமே
உடன் பிறப்பு என்பதால்!

தமக்கை யெனும் உன்
தென்றலை மறவாது வாழ்ந்திடு!
தீஞ்சுவை சொற்களை பேசாது
தேனாய் பேசிடு அவளிடம்!

 தமக்கை யெனும் உறவை
தவறி கூட மறவாது
தரணி-யில் நீ 
தங்க மகனாய் வாழ்ந்திடு!

சகோவை உன் வாழ்வின்
சுமையாய் எண்ணாது வாழ்ந்திட்டால்
சமாதி யில் எனதுறக்கம்
சொர்க்க மாய் இருந்திடுமே!

பொன் பொருள் பணத்தால்
பிரிவினை வராது வாழ்ந்திடு
பாசமெ னும் வேலியை
போர்வை யாக்கி வாழ்ந்திடு!

பெரிய வனெனும் மா
பாதக கர்வம் வேண்டாமே!
பவித்ர உலகில் நீயோ
பொன் மகனாய் வாழ்ந்திடு!

கல்லறை யில் எனது
கதறல் உனது செவியில்
கேளாது உனது செயலெனக்கு
கண்ணீரை தராது வாழ்ந்திடு!

பாச மெனும் வலையை
பின்னிடு மகனே மகளே!
பூரிப்படைந்  திடுமே எனதுள்ளம்!
புறங்கா ட்டில் தூங்கிடும்

எனக்கு வேண்டுமே மகனே
என்றும் உங்களின் கூட்டுவாழ்வு!
எத்த னாய் வாழாது
ஏலாதி மணமாக வாழ்ந்திடுக!

       பா.கலைமகள்
       விழுப்புரம்.

பதிவு : Kalaimagal
நாள் : 21-Jan-20, 12:14 pm

மேலே