எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இறக்கும் வாழ்க்கை இறப்பும் பிறக்கும் வாழ்க்கையடா இறுதியில் கிட்டும்...


           இறக்கும் வாழ்க்கை

இறப்பும் பிறக்கும் வாழ்க்கையடா
இறுதியில் கிட்டும் வழக்கமடா

பாச பந்தம் மறுக்குமடா
ஆச பணமும் மறக்குமடா

முற்றுப்புள்ளி முளைக்குமடா
முடிவு சொல்லி முடிக்குமடா

அமைதி தொல்லை தொடங்குமடா
ஆயிசு எல்லை அடங்குமடா

அறிவு விளக்கும் அணையுமடா
அறியாமை உனக்கும் புரியுமடா

அடையாளம் ஒன்றும் இருக்குமடா
அது அழியாதா என்றும் நினைக்குமடா

நட்டமெல்லாம் இட்டம் பெறுமடா
இட்டம் இறுதியாய் நட்டம் காணுமடா

அடக்கம் அன்பும்  அழித்தாயடா
அது ஆள  வழிமறித்தாயடா 
 கோவம் திமிறும் குழந்தையடா
அதை கொஞ்சம் கொஞ்ச மறந்தாயடா

வாழ்க்கை வாழ பிறந்தாயடா
வாழ்வு முடிந்து இறந்தாயடா

கற்ற பாடம் துறந்தாயடா..  நீ
கற்கும் பாடமாய் திகழ்வாயடா..
                                                   -ஜாக்✍️
                  

பதிவு : ஜெ கணேஷ்
நாள் : 9-Feb-20, 9:27 am

மேலே