எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஊரையே அழைப்பது போன்று ... மக்களால் அங்கீகரிக்கப்படாத மனங்கள்...

ஊரையே அழைப்பது போன்று ...


மக்களால் அங்கீகரிக்கப்படாத  
மனங்கள் ஏற்றுக்கொள்ளப்படாத 
திணிக்கப்படும் எந்தவொரு சட்டமும்  
விரும்பாத வழியில் வழிநடத்துவதும் 
ஏற்காத கொள்கையை கட்டாயமாக்குவதும் 
மண்ணில் நிலைக்குமென நினைப்பது  
நீதியெனவும் நியாயமெனவும் உரைப்பது  
விதைக்காத நிலத்தில் விளையுமென்று 
அறுவடைக்கு நாள் குறிப்பதென்பதாகும் !
கற்பனையில் வீடுகட்டி புகுவிழாவிற்கு 
ஊரையே அழைப்பது போன்றதாகும் !


பழனி குமார் 
10.02.2020


நாள் : 10-Feb-20, 9:18 am

மேலே