எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மதமும் சாதியும்தான் மனிதனைப் பிரிக்கிறது என்றால் அவை என்றுமே...


மதமும் சாதியும்தான் மனிதனைப் பிரிக்கிறது என்றால் அவை என்றுமே தேவையில்லை . கலவரங்கள் காலூன்ற மதம் அடிப்படைக் காரணமெனில் அதனை தூக்கி எறிய வேண்டும் .சாதி அடையாளம் இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியுமெனில் சமூகம் சாக்கடையாகத்தான் மாறும் .அவரவர் தாய்மொழியை ஆதரிப்பதில் , போற்றுவதில் ,ஆராதிப்பதில், உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை . ஆனால் தாய்நாடு என்பது நம் அனைவருக்கும் ஒன்றே என்பதை மறத்தல் கூடாது . மதமெனும் கூர்மையான கத்தி , மனிதமெனும் நேயத்தை ஒருங்கிணைந்த இதயத்தைக் கிழிக்கிறது. ஒற்றுமை உணர்வு வீதிகளில் அல்லல்படுகிறது .பகையுணர்வு பந்தல் அமைத்து அதில் படுத்து உறங்குகிறது என்பதுதான் வேதனை அளிக்கிறது . 
 


சாதியும் மதமும் ஒருபோதும் இதயங்களை இணைக்காது..
மாறாக  பிளவுபடுத்தும்.  


நான் என்பதை மறந்து, நாம் என்று சிந்திக்க முயலுங்கள் .


பழனி குமார் 

நாள் : 26-Feb-20, 6:45 pm

மேலே