எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​ஒரு இனம்புரியாத ஆழ்ந்த கவலை எனக்குள் .ஆனால் என்னைப்பற்றி...

​ஒரு இனம்புரியாத ஆழ்ந்த கவலை எனக்குள் .ஆனால் என்னைப்பற்றி அல்ல , எதிர்கால உலகைப் பற்றியும் , வருங்கால தலைமுறையைப் பற்றியும் . 


" சாதிகள் இல்லையடிப் பாப்பா " எனஅறிவுரைக் கூறிய பாரதியின் கூற்றும் ,

" மானுட சமுத்திரம் நானென்று கூவு " , அதாவது " நீ என்பது நீயல்ல , குடும்பம் , சமூகம் , நாடு என்ற எல்லைகளைக் கடந்து , இந்த பிரபஞ்சத்துக்கே நீயே பொறுப்பு " என்று ஒவ்வொருவரையும் தலைவனாக்குகிற வரியை உரைத்த பாரதிதாசனின் சிந்தனையும் , 

" வாழ்க்கை என்பது அவனவனுக்கு என்று நினைக்காது ,மற்றவர்கள் நலனுக்கும் என்று கருது " என அறிவார்ந்த சிந்தனைத் துளியை வித்திட்ட  தந்தை பெரியாரின் பொன்மொழியையும் , 

" நெஞ்சிலே வலுவிருப்பின்  வெற்றி தஞ்சமென்று நம்மிடம்  வந்து கொஞ்சுவது உறுதி " என்று பறைசாற்றிய அறிஞர் அண்ணா அவர்களின் உண்மை வார்த்தைகளையும் ,

உள்ளத்தில் நிலைநிறுத்தி , எதையும் எதிர்கொள்ளும் தைரியமுடன் , தன்னம்பிக்கையையும் வளர்த்து நடைபோடாது , உணர்வுகளால் தூண்டப்பட்டு மாற்று எண்ணமுடன் வாழ நினைத்தால் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக மாறுவது மட்டுமல்லாமல்,

அது சமுதாய சீரழிவிற்கும் அடித்தளமாகவும் அமைந்திடும் என்பதை இன்றைய தலைமுறை உணர்ந்தால் , வளமான வருங்காலம் உருவாகி , செழிப்பான வாழ்வும் தழைத்து ஓங்கும் என்பதில் ஐயமில்லை . 


ஒன்றுபட்ட  சமூகம் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் .  

 பழனி குமார் 
 ​27.02.2020​
            
        
 நாள் : 27-Feb-20, 10:31 pm

மேலே