எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கொரோனோ புற்றுநோயினை சற்றென அடக்கிடுவேன் கதிர்வீச்சை கொண்டு! தொற்றுநோய்...

கொரோனோ 


புற்றுநோயினை

சற்றென அடக்கிடுவேன்

கதிர்வீச்சை கொண்டு!

தொற்றுநோய்

அல்லவோ நீ!

பற்றிக்கொண்டு பரவுகிறாய்

ஆஸ்திரேலியா காட்டு தீ போல்!

எங்கோ சந்தையில் தோன்றினாய்

இங்கோ பங்கு சந்தையை மாற்றினாய்!

பல ஆட்டங்களை ஆட்டம் ஆட வைத்தாய்!

சில ஆட்டங்களை ஊத்தி மூட வைத்தாய்!

மருத்துவரை மயக்கத்தில் வைத்தாய்!

மக்களை கலக்கத்தில் வைத்தாய்!

செவிலியரை தலை சாய்க்க விடவில்லை

அவரை போல் சேவை செய்ய யாருமில்லை!

செல்களில் வைரஸாய் முளைத்தாய்!

செல்பேசிகளில் வைரலாய் ஒலித்தாய்!

சொந்த தாய்நாட்டிலேயே விடாமல் மறுத்தாய்!

சொந்த தாயையே தொடாமல் பிரித்தாய்!

நிறைவா எங்களின் தூக்கத்தை பறித்தாய்!

இறைவா எதற்கு கொரோனாவை படைத்தாய்!!!

பதிவு : Aaru phy6
நாள் : 19-Mar-20, 11:57 am

மேலே