எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோரானா .....இதையும் பார்க்க வேண்டிய நிலை இன்று ....

கோரானா .....இதையும் பார்க்க வேண்டிய நிலை இன்று .


எனது குறுகிய ( ? ) வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்வுகள் பார்த்துவிட்டேன் . நல்லது, கெட்டது , போராட்டங்கள் , தேர்தல்கள் (விசித்திரமான முடிவுகள் ) , நல்லவர்கள் , கெட்டவர்கள் ,தியாகிகள் , காந்தியவாதிகள் , பொதுநலவாதிகள் ,நம்மை என்றும் மறக்காதவர்கள் , நன்றி மறந்தவர்கள் , சுயநலமற்ற இதயங்கள்..... இப்படி பலவகை ....!

இன்று காணும் மக்கள் நலனுக்கான ஊரடங்கு சற்று வித்தியாசமானதும் ஆனால்அவசியமானதும் கூட . ஏற்கனவே நாம் பொருளாதார வீழ்ச்சியைப் பற்றி கவலை கொண்டுள்ள நிலையில் , இந்த அபாயகரமான , மக்களை அழிக்கும் வல்லமை கொண்ட கோரோனா வைரஸ் நம்மை ஆட்டிப் படைப்பது எதிர்பாராதது , வருத்தம் தரக்கூடியது மட்டுமன்றி மக்களை அதிர்ச்சி அடையவும்
வைத்துள்ளது .

இதிலிருந்து நாம் அனைவரும் மனவலிமையுடன் விரைவில் கடந்து வர வேண்டும்,
மனஅழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும் , தற்போது நிலவும் போருக்குப் பின் ஏற்படும்
அமைதியிலிருந்து மீண்டு, பழைய நிலையை அடைய வேண்டும் ,அனைவருக்கும் அனைத்தும் எளிதில் கிடைக்க வேண்டும் , 


இந்த துயர் நீங்கி , அசாதாரண சூழல் விலகி ,இன்பம் பயக்கும் நிலை உருவாக வேண்டும் என்பது எனது விழைவு .அனைத்தும் முடிந்து நாம் அனைவரும் சாதாரண நிலைக்கு வருவதற்கு கூடுதல் காலம் தேவை . ஆனாலும் தவிர்க்க முடியாத ஒன்று .


பழனி குமார்
29.03.2020

நாள் : 29-Mar-20, 11:01 pm

மேலே