எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெளிநாட்டு வாழ்க்கை... சிறகடித்து பறந்த கிளி.. சீமைக்கு பரந்து...

வெளிநாட்டு வாழ்க்கை...
சிறகடித்து பறந்த  கிளி..
சீமைக்கு பரந்து சென்று ஆனதென்ன பலி...

வறுமையின் பிடியால் வாடினான் செடியாய்..
குடும்ப சுமையை சுமந்தான் மரமாய்...
அவனது ஆசைகளை 
புதைத்தான் ஒரு ஓரமாய்....
பாலைவனத்திற்கு பறந்து சென்றான் 
நண்பர்களையும் உறவினர்களையும் வாழ்ந்த கிராமத்தையும் விட்டு மனது நிறைந்த பாரமாய்......
அங்கு இறங்கியவுடன் 
சுற்றித் திரிந்தான் தாகமாய்...
அவனது கண்ணீரையே குடித்தான்
மனதில் நிறைந்த வலிகளுடன் சோகமாய்....

காய்ச்சல் வந்தாலும் கண்டுகொள்ள ஆளில்லை...
மாய்ச்சல் வந்தாலும் படுத்துறங்க மனமில்லை...

ஓடினான் ஓடினான்
வறுமையை உடைத்தெறிய..
சுமை களுக்கு விடை தெரிய...
சரணடைந்தான் பிணைக்கைதியாக அயல்நாட்டில்...😭
சீமைக்கு சென்றாவது சீமானாக ஆகி விடலாம் என்ற எண்ணத்தில்.....

அவனது குடும்ப சுமையை குறைந்தன..
அவனது வறுமையின் பிடியோ உடைந்தன..
அவன் வாடிய பொழுது வராத உறவினர்களும் அவனை சூழ்ந்தன...
என்ன பலன் ..என்ன பலன் ..என்ன பலன்..
என்று கூறி அவன் மனது குறுகி அழுதன...

தலையில் சுமையை தாங்கி தலைமுடியை பறிகொடுத்தான்...
அவன் வாழும் வயதை அயல்நாட்டிலே தொலைத்தான்...
தன் வயதை பறிகொடுத்து தன் குடும்பத்தாருக்கு வாழ்வு கொடுத்தான்...

தன் சுமை தீர்ந்ததோ என்று என்னி இனியாவது நம் வாழ்க்கையை தொடங்கலாமே என்று கூறி அவன் பிறந்த நாட்டிற்கு விரைந்து சென்றான் ......

அங்கு சென்றவுடன் சில நாட்கள் கழித்து தன் குடும்பத்தாரோ மீண்டும் எப்பொழுது செல்வாய் என்ற சொல்லைக் கேட்டு பரிதவித்தான் பிணைக்கைதியாக......

வேண்டாம் மனிதா வேண்டாம்...
வெளிநாட்டிற்குச் சென்றால்தான் உன் வாழ்வில் வெற்றியடையலாம் என்ற மாயை உடைத்தெறி....... உன் சொந்த நாட்டில் வெறி கொண்டு உழைத்திடு நெறிகொண்டு உயர்ந்திடு.....

Create by.. thamim💌✍️✍️

நாள் : 10-Apr-20, 11:34 pm

மேலே