நமது வாழ்க்கையில் " ஊரடங்கு " எனும் சுயபாதுகாப்பு...
நமது வாழ்க்கையில் " ஊரடங்கு " எனும் சுயபாதுகாப்பு நிலையை, தன்னலம் கருதி ,
எதிர்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது சற்று
வருத்தமாக உள்ளது. ஆனால் இன்று உலகம் முழுவதும் அடங்கி உள்ளது . நாம் மட்டும் விதிவிலக்கல்ல .அனைவரும் முடங்கி இருக்கிறோம் இல்லங்களில் முணுமுணுப்புடன், மனவலியுடன் நிச்சயம் .
அதேநேரத்தில் பொருளாதார அளவில் வீழ்ந்து ,வருமானத்திற்கு தற்காலிக தடை ஏற்பட்டு
நடைமுறை வாழ்வு பாதிக்கப்பட்டு ,பலரும் ஒருவேளை உணவிற்கே அல்லல்படும் நிலை உருவாகி உள்ளது மறுக்க முடியாது .
இந்த இக்கட்டான சூழ்நிலையில் , அடுத்தவர் நலனுக்காக இரவுபகலாக பாடுபடும் மருத்துவர்கள் ,செவிலியர்கள் , காவல்துறை நண்பர்கள் மற்றும் பொதுநலத் தொண்டர்கள் ஆற்றிவரும் சேவை புரிந்து வருவதை எந்நாளும் மறத்தல் இயலாது . நாம் என்றும் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் .
விரைவில் கொரோனா எனும் இருள் விலகி மண்ணில் மகிழ்ச்சி எனும் ஒளி பரவிட
விழைகிறேன் .
பழனி குமார்
27.04.2020
27.04.2020