எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவளுக்கு இரண்டாவது காதலாக இருக்க விருப்பமில்லாதவனாய் முதல் காதலை...

அவளுக்கு இரண்டாவது காதலாக 
இருக்க விருப்பமில்லாதவனாய் 
முதல் காதலை அழிக்க முயற்சித்தேன் !!!
இன்று இல்லாவிட்டாலும்
என்றோ ஒருநாள் 
அவளை நீ பிரிந்து செல்வது உறுதி 
என தெரிந்தும்... 
அவளை பிரிந்தால் நீ  இறந்து விடுவாய் 
என புரிந்தும்...  
இயற்கையாய் நீ பிரியும் வரை 
காத்திருக்க விருப்பமில்லாம் 
செயற்கையாய் 
உன்னை அழிக்க  இரக்கமற்றவனாய் இரவில் கள்வன் போல் வந்தேன் 
அவள் அறைக்கு ...
உறக்கத்திலும் அவள் உன்னை 
இருக்க பற்றிருந்தால்!!!
கோவம் கொண்டு பிரிக்க 
எண்ணினேன்... 
அதன்பின் சிறிதுநேரம் 
அவள் உன் மேல் வைத்த 
காதலை எண்ணி  
அழிக்க மனமில்லாமல்...
நானும் காதல் கொண்டேன் 
உன்னை இரண்டாவதாக... 
இப்போது புரிந்தது அவள் ஏன் உன் மீது இவ்வளவு காதல் கொண்டால் என்று... 
அவளின் முதல் காதலே!!!
விரல்களின் ராணியே!!!
உனக்கு யார் பெயர் வைத்தது 
நகம் என்று? 

நாள் : 22-May-20, 3:46 pm

மேலே