எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயற்கை உலகிற்கு வகுத்தளித்தக் காலங்கள் போதாது என்று நினைத்திருக்கும்...

இயற்கை உலகிற்கு வகுத்தளித்தக் காலங்கள் போதாது என்று நினைத்திருக்கும் போல ...


அதனால் "கொரோனா" எனும் கிருமிகள் பரவும்  கொடுமையான காலத்தை

கொலையுதிர்க் காலம்  எனும் வடிவில்

மேலும் ஒன்றை அளித்திருக்கிறது நமக்கு .அனைத்து காலத்தையும் சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை நாம் தயார்படுத்திக் கொண்டு காத்திருப்பதைப்போல இதற்கும் வருங்காலத்தில்
அதோடு பழகி வாழ கற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்கான முன்னோட்டம் தான் இந்த ஊரடங்குக் காலம் என்று நினைக்கிறேன் !

ஆணாலும் இதற்கு முடிவும் தெரியவில்லை , காலத்தின் அளவுகோலும் புரியவில்லை.எனது விருப்பம் மீண்டும் இதுபோன்ற கொடூரங்களும் மரணங்களும் நிகழ்கின்ற
காலம் நமக்குத் தேவையே இல்லை .

ஒன்றிணைந்து முறியடிப்போம் 
இணைந்த கரங்களால் கொரோனாவை !
இறுதிஊர்வலம் நடத்துவோம் ,
இரக்கமற்ற கொரோனா
அறவே நீங்கிய நிலையுடன் !


பழனி குமார்
28.05.2020

நாள் : 29-May-20, 11:04 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே