தினமும் கவிதை எழுததொடங்கும் பொழுதெல்லாம் நினைவில்வந்து செல்லும் முகங்கள்...
தினமும் கவிதை எழுததொடங்கும் பொழுதெல்லாம் நினைவில்வந்து செல்லும் முகங்கள் இவை தான்
பார்த்த நாள் முதல் மிஞ்சியநாட்கள் வரை நட்பு என்பது பிரிக்க முடியாத உறவு
இந்த உலகில் அனைவருமே மனநோயாளிகள் தான்நண்பன் என்பவன் இல்லாவிட்டால் நம்முள் இருக்கும் திறமைகளை நாம் அறியும் முன்னே அதை வெளியே கொண்டு வருவது இவர்களை தவிர யாராகவும் இருக்க முடியாது
உரிமையாக பேசுவது
ஒருவரை ஒருவர் கலாய்ப்பது
எந்தவித எதிர்பார்புகளும் இன்றி பழகுவது
குற்றம் குறை இருந்தாலும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் அன்பை மட்டுமே வெளிப்படுத்துவது! கள்ளம் கபடம் இல்லாத சிரிப்புகள்
ஒன்றாக அமர்ந்து கேட்கும் மெல்லிசைகள்
ஒளிவு மறைவு இல்லாத பேச்சுகள்
என இவை எல்லாம் நட்பில் மட்டுமே சாத்தியம்
நாம் வெற்றி பெற்றாலும்
சரி தோல்வி அடைந்தாலும் சரி நம்மை எப்பொழுதும் ஊக்கப்படுத்துபவர்களும் அவர்கள் தான்
தோல்விகளால் சோர்ந்து போய் தடுமாறும் பொழுதெல்லாம் "ஏய் உன்னால முடியும் முயற்சி பண்ணி பாரு"னு சொல்ற ஒரே ஆளும் அவங்கதான்
நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி சோகமா இருந்தாலும் சரி நம்ப முகத்தை வைத்தே கண்டுபிடிப்பவர்களும் அவர்கள்தான்
எவ்வளவு சோகமாக இருந்தாலும் சரி இவர்கள் நம் அருகில் இருந்தால் எல்லாமே மறந்து தான் போகிறது
பழைய நண்பனோ
புதிய நண்பனோ
பள்ளி நண்பனோ
கல்லூரி நண்பனோ
பிரிந்து போன நண்பனோ
மனதை உடைத்து போன நண்பனோ ஆனால் நினைவுகள் என்றும் மாறப்போவதில்லை