💐💐💐💐💐💐💐💐💐💐💐 புழுக்களாகப் பிறந்தாலும் மண்ணுக்குள் வாழ்வதால் மண்புழு என்று...
💐💐💐💐💐💐💐💐💐💐💐
புழுக்களாகப் பிறந்தாலும்
மண்ணுக்குள் வாழ்வதால்
மண்புழு என்று புகழப்படுகிறது....
கல்லாக இருந்தாலும்
கோவிலுக்குள் இருப்பதால்
தெய்வமென்று வணங்கப்படுகிறது
முள்ளாக வளர்ந்தாலும்
ரோஜாவோடு வளர்வதால்
பாதுகாப்பென்று ரசிக்கப்படுகிறது..
தீயாக எரிந்தாலும்
விளக்கில் எரிவதால்
தீபமென்று மதிக்கப்படுகிறது...
மனிதா!
நீயும்....எப்படி?
பிறந்தாய் என்பது முக்கியமல்ல
எப்படி
வாழ்கிறாய் என்பதே! முக்கியம்...!
படைப்பு
கவிதை ரசிகன்
💐💐💐💐💐💐💐💐💐💐💐