எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பழய செருப்பு:- நானும் அந்த யாரோ ஒரு பணக்காரனும்...

பழய செருப்பு:-

நானும் அந்த யாரோ ஒரு
பணக்காரனும்

அவன் கடைக்குள்ளும்
நான் கடைக்கு வெளியிலும்

உயர்ந்த விலையில் அவனும்
பேரம் மசியாத 
குறைந்த விலையில் 
நானும்

அன்று 
புதிதாக வாங்கினோம்
ஜோடி செருப்புகளை

அவரவர்
வீட்டுக்குச் செல்வதற்குள்
அவரவர் பாதங்களுக்கு தக்கபடி
தங்களை
உருமாற்றிக்கொண்டது 

என் செருப்பு
பகுதிவாழ் ஞமலியாக
மாறிப்போனது

அவன் காலணி
உயர்சாதி டாமியாக
மினுமினுத்தது

புதிதைகூட புதிதாகவே
வைத்திருக்க தெரியாத
ஏழைகள் 

எப்போதும்
புதிதாகவே தெரிகிறார்கள்
அவர்கள் அணிந்திருக்கும்
பழய செருப்பில்.

~ராச்

நாள் : 28-Jun-20, 10:07 am

மேலே