எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதுவரை நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வி...

இதுவரை நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வி கேட்பதை
மறந்து நாம் ஒவ்வொருவரும்  இனி ,

தனிமனிதரின் வாழ்க்கை எங்கே செல்கிறது என்ற ஐயம் கலந்த கேள்வி நமது மனதில் எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது . அந்த சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம் என்று நினக்கும்போது கவலையும் அச்சமும் மேலோங்குகிறது .

இதற்கு கொரோனா எனும் கொடுமையான வைரஸ் காரணம் என்று கூறினாலும் , அதற்கு முன்னரே நமது நாட்டின் பொருளாதார மற்றும் வாழ்வாதார நிலைகள் அடிபாதாளத்திற்கு சென்றதாலும் ,எதிலும், எங்கும் அரசியல் என்ற அவலமும் , அரசியல்வாதிகளின் தரமற்ற செயல்களும் , திறனற்ற நிர்வாகமும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வை பெரிதும் பாதித்து இருக்கிறது என்பது மிகையல்ல .

பல தலைமுறைகளை கடந்தவர்களும் , வாழ்வின் இறுதிப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலரும் இதைப்பற்றி அதிகம் கவலையுடன் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கும் நிலைதான் இன்று . அதே நேரத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் அடுத்த (அல்லது ) இளைய தலைமுறையின் எதிர்காலத்தை நினைக்கும் போது மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது .


ஏற்றம் , முன்னேற்றம் என்றும் , வளர்ச்சி மற்றும் வளர்ந்த நாடு என்று கூறியபவர்களும் , கூறி வருவபவர்களும் இன்று வாய்மூடி மௌனம் காப்பது அதிர்ச்சி கலந்த விந்தை . அதற்கு அடிப்படைக்காரணம் பொதுநலம் மறைந்து , சுயநலம் நிறைந்து , மனிதநேயம் மரணித்ததும் முக்கிய காரணிகள் ஆகும் .

மகாத்மா காந்தி அவர்களும் , கனவு காணுங்கள் என்று மாணவர்களை தட்டி எழுப்பிய அப்துல் கலாம் அவர்களின் எண்ணங்கள் ஈடேற
முடியாமல் போவதுதான் மிகவும் வருந்தத்தக்கது .

அதுமட்டுமன்றி நீதித்துறையும் காவல்துறையும் மக்களுக்கு அரணாக இல்லாமல் , தகுந்த நீதியும் வழங்காமல் தடம் மாறி செல்வது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது . மக்கள் அவர்கள் மீதுள்ள நம்பிக்கையும் குறைந்து வருகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும் .அனைத்திற்கும் காலம்தான் பதில் கூற வேண்டும் .

ஆனால் அந்த ஏற்றமிகு மாற்றத்தை, பகுத்தறிவு வளர்ந்து சமத்துவ சமுதாயம் மலர்ந்த பொன்னான பொழுதை, சாதிசமயம் அனைத்தும் மரணம் அடைந்த காலத்தை, சுயமரியாதை ஓங்கி, சுயநல மனங்கள் மறைந்து பொதுநல நெஞ்சங்கள் பெருகிய பொற்காலத்தை கண்டு களித்திட நாம் இருப்போம் என்பது சாத்தியமில்லை.


பழனி குமார்
29. 6.2020  

நாள் : 30-Jun-20, 8:06 am

மேலே