எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நோய் கண்டு வீட்டுக்குள் பதுங்க வெண்ணிற ஆடை அணிந்த...

நோய் கண்டு வீட்டுக்குள் பதுங்க
வெண்ணிற ஆடை அணிந்த 
தேவதையாய் 24 மணி நேர சேவையில்

தினம் தவறாது வணங்கிய தெய்வம்
நான்கு சுவற்றுக்குள் பூட்டப்பட்டு இருக்க
ஸ்டெத்தஸ்கோப் அணிந்த தெய்வமாக 
வெளியில் நீ
சுற்றத்தாரும் தனித்து விட்டு நீங்க
தன்னலமற்ற சேவையால்
ஒளிர்விடும் தீபமாய்  பல உயிர்கள்

நாட்டு எல்லையில் உயிர் விடுத்து 
போராட ராணுவம் ஒருபுறம் இருக்க
மக்கள் உயிர் காக்க போராடும் நீயும்
ஒரு மருத்துவ ராணுவமே

மருத்துவராய் உங்கள் அர்ப்பணிப்பு
நிகரில்லா மகத்துவம்  பொருந்திய தனி சிறப்பு!! பதிவு : Priya
நாள் : 2-Jul-20, 11:13 am

மேலே