எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யாருமே போகாத போர்க்களமொன்று என்னுள் புதைந்து கொண்டிருக்கின்றது வெற்றி...

யாருமே போகாத போர்க்களமொன்று
என்னுள் புதைந்து கொண்டிருக்கின்றது 
வெற்றி என்ற வேர் பட்டு 
வெகுநாட்கள்  ஆகி விட்டன 
ஆனாலும் அந்த இரத்த ஆற்றின் சலசலப்பு
இன்னும் தீர்ந்தபாடில்லை 

நீலநிற விஷப் பயிர்கள் 
வேரூன்றி பெருவிருட்சமாய்  படர்ந்து விட்டன
விருப்பம் என்ற சொல்லே  வெறுத்துவிட்டது 

ஆனாலும் 
நிலவின் ஒளியும் நுழைய முடியாத இருள்
என் இருதயத்தின் இருட்டறைகளை
விழுங்கிக்கொண்டிருக்கின்றன.

பதிவு : திஹம்பரன்
நாள் : 5-Aug-20, 8:46 am

மேலே