எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாசமும் நேசமும் ********************* மழைக்கு ஒதுங்கிய சிறுவன் மரத்தடிக்கு...

   பாசமும் நேசமும்  
*********************


மழைக்கு ஒதுங்கிய சிறுவன் 
மரத்தடிக்கு வந்தான்..
கையில் ஒரு காகித பொட்டலம்..
பாதுகாப்பாக கால்சட்டையில் வைத்தான் நனையாதிருக்க..அருகில் நின்றவர் அதட்டியபடி கேட்டார்..

ஏனிந்த பதற்றம்
எதை மறைக்கிறாய்
எங்கிருந்து வருகிறாய் என்றவரிடம் கூறினான்
குளிரில் நடுங்கியபடி...
வீட்டில் படுத்துள்ள அம்மாவிற்கு 
உணவு எடுத்து செல்கிறேன் என்றவனிடம்..
எங்கு வாங்கினாய்,

திருடினியா என்று மிரட்டினார்.இல்லை சார்..எனக்கு பள்ளியில் தந்த மதிய உணவில் சிறிது மட்டும் சாப்பிட்டு மிச்சத்தை எடுத்து காகிதத்தில் மடித்து எடுத்து வருகிறேன். மழையில் நனையாதிருக்கவே கால்சட்டையில் வைத்தேன். பாவம் அம்மா பசியுடன் இருப்பார்கள் என்றதும் கேட்டவர் கண்கலங்கினார்.

தாய்ப் பாசத்தின் உன்னதத்தை உணர்ந்து உள்ளம் சிலிர்த்தார் ...
மதிய உணவே மிகவும் சிறிதளவு தான். ஆனால் அதில் பாதியை மட்டும் சாப்பிட்டு விட்டு மீதியை தனது தாய்க்கு எடுத்து செல்லும் அந்த செயலால் மிகவும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்த அந்தப் பெரியவர் அவனை கட்டியணைத்து வாழ்த்தினார்.

தானே வலிய சென்று மேலும் உணவை வாங்கி வந்து அவன் கையில் அளித்தார். பிறகு தனது வாகனத்திலயே அவனை வீட்டிற்கு அழைத்து சென்றார்.

விழிகள் விரிந்தன
வியப்பின் விளிம்பு வரை
இதயம் குளிர்ந்தது
இருகரம் கூப்பி வணங்கியது
இருவரின் உள்ளத்தை
பாசமும் நேசமும்
ஒன்றாய் பயணித்ததை
கண்டு மகிழ்ந்து
கண்கள் கசிந்தது..

நினைத்துப் பார்த்தேன்
பாசமும் நேசமும் இணைந்து இருந்தால்
இவ்வுலகில் பசியும் பட்டினியும் மறைந்து விடும் , 
களவும் குற்றமும் குறைந்து விடும் என்று. 
இல்லாமை இல்லாத நிலை உருவாகிடும்.

இது கற்பனையா உண்மையா என்று ஆய்ந்திடாது இதில் வரும் இரண்டு கதாபாத்திரங்களில் உங்களை பெரிதும் கவர்ந்தவர் யார் என்று
கூறுங்கள்.


பழனி குமார்  

நாள் : 5-Aug-20, 2:46 pm

மேலே