எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

களப்பணி -------------------- நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணம்...

 களப்பணி 

--------------------

நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணம் என்னுள் நிரம்பி வழிகிறது .​​ஆனால் ஏதோவொன்று என்னைத் தடுக்கிறது . ​சிந்தையின் நிலை  தற்போது பயன் பாட்டில் இல்லாமல் இழுத்து மூடப்பட்ட அந்தமான்  சிறைச்சாலை போல உள்ளது . சிந்தனை அறுந்துவிட்ட பட்டம் போல், விழும் இடம் தெரியாமல், வானில் காற்றிழுக்கும் திசையில் மிதந்துசெல்கிறது . உடல்நிலையும் 
மனநிலையும் யார் வலிமைமிக்கவர் என்பதை வெளிப்படுத்தப் 
போராடிக் கொண்டிருக்கின்றன . 


அவை இரண்டையும் இணைத்து என் நிலையை ஒருபுள்ளியில் நிலை நிறுத்தும் களப்பணியில் ஈடுபட்டுள்ளேன் . விரைவில் அது முடிவுக்கு வரும் என நம்புகிறேன் . 


பழனி குமார் 
 20 .01 .21 
               

நாள் : 20-Jan-21, 8:02 pm

மேலே