எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உறங்கும் வேளையில் உழன்றவை ! ----------------------------------------------------------- உறங்கச் சென்றேன்...

உறங்கும் வேளையில் உழன்றவை !

-----------------------------------------------------------

உறங்கச் சென்றேன் ....விழிகளை மூடிய அடுத்த நொடியே உள்ளத்தின் கதவுகள் திறந்தன . ​இது இயல்பான ஒன்றுதான் . அனைவருக்கும் ஏற்படுகிற ​நிகழ்வுதான் . ​​எண்ணங்கள்​ எட்டுத்திக்கும் ஓடியது .​சில ​சற்று நெருடலாகவும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைத்தது.​ ​சிதறிய சிந்தனைக​ளில் ​ஒரு ​சில பதராக​வும் இருந்த​து .​​

தற்போது நாட்டில் தான்எத்தனை பிரச்சினைகள் ...?எவ்வளவு குழப்ப​மான ​சூழல்கள் ?காற்றில் பறக்கும் பஞ்சாக , சமூகத்தில் திசையறியாமல் பறந்து திரியும்ஏழையின் ஏக்கம் நிறைந்த மூச்சுக் காற்று ,சோக​த்துடன் ஒலிக்கும் அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகள் ​!​சாதிமத வெறியாட்டங்கள் , ​வாழ்வதற்கு ​இடமே இல்லாத நிலையிலும் இட ஒதுக்கீடு ​பற்றிய ​பிரச்சினைகள் , அரசியல் எனும் பெயரில் நிகழும் அவலங்கள் , தீர்க்கப்படாத நதிநீர் பங்கீடுகள் , ​கட்டி முடிக்கப்பட்ட அணைகளால் எழும் அச்சங்கள் ,கல்விக் கொள்கை மாற்ற​த்தால் ​விளையும் நன்மை தீமைகள் ,வரவு செலவு திட்டத்தால் ( பட்ஜெட் ) ஏற்படவுள்ள சாதக பாதகங்கள் , மேலும் அதன் அடிப்படையில் நிகழும் காரசார விவாதங்கள் ​, ​பல நோய்களின் தாக்கத்தால் ​அச்சமுடன் வாழும் சமுதாயம் !​​

இவையன்றி நாம் எதிர்கொள்ளவுள்ள தேர்தலின் முடிவு பற்றிய மனநிலை ! என பல்வேறு அம்சங்கள் கொண்ட சூழ்நிலை தான் தற்போது ....!​

தீர்வு தான் என்ன , எப்போது ? விடை தெரியா வினா இது .

வாழ்ந்து முடிந்தவர்கள் இனி வாழப்​ ​போ​கும் அடுத்த தலைமுறைக்காக ...​வாழும் சமூகம் நிம்மதியாக வாழ்ந்திட ,வளரும் தலைமுறை​யின் வருங்காலம் உறுதியாக ,​ ​வளமாக, அமைதியாக,​ ​ஆனந்தமாக அமைந்திட ​அனைவரும்ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் !​

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது ​!​​


பழனி குமார் 
 02.02.2021LikeCommentShare

நாள் : 2-Feb-21, 9:54 pm

மேலே