எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️ *அம்மா கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* ⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️...

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

*அம்மா கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

நான்
பெண் குழந்தை என்பதால்
எப்படியும்
கள்ளிப்பால் தான் கொடுப்பீர்கள்...
அதை
ஒரூநாள் கழித்து கொடுங்கள்...
அந்த ஒரு நாளாலாவது
உயிர் வாழலாம் என்றல்ல...
அம்மா!
உன் மடியில்
உறங்கலாம் என்றுதான்...!!!

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
குழந்தை பிறந்தவுடன்
எல்லா அம்மாக்களும்
குழந்தைக்கு
பால் கொடுப்பார்கள்
முத்தம் கொடுப்பார்கள்
அரவணைப்பு கொடுப்பார்கள்
ஆனால்
நீதானம்மா
நான் பிறந்தவுடன்
எனக்காக கொடுத்தாய்
"உயிரையே...!"

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

அம்மா !
என் பசிக்கு
பாலானாய் ....
என் உறக்கத்திற்கு
படுக்கையானாய்.....
படிக்க புத்தகமானாய்....
என் நோய்க்கும்
மருந்தானாய்.....
என் விளையாட்டு
பொம்மையானாய் .....
என் படிப்பிற்கு புத்தகமாய்......
பதிலுக்கு
உனக்கு
நான எதுவாகவாவது
ஆகும் முன்னறே!
ஏனம்மா "காலமானாய் ?"

*கவிதை ரசிகன்*

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

நாள் : 28-Mar-21, 9:02 pm

மேலே