எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பேரூந்தில் பயணப்படுகிறபோது வைத்துக்கொள்ள வேண்டிய பயணச்சீட்டை விட்டுவிட்டு உன்...

பேரூந்தில் பயணப்படுகிறபோது வைத்துக்கொள்ள வேண்டிய பயணச்சீட்டை விட்டுவிட்டு
உன் நினைவை கொண்டு செல்கிறேன்
நீ நினைவின் வழியே 
வீடு வரை வந்துவிடுகிறாய்
வந்த உன்னை 
வரவேற்று 
உட்கார சொல்லக்கூட முடியவில்லையே என நான் கவலைப்பட
நீ சொல்கிறாய் 
உன் இதயத்தில் உட்காரதானே வந்திருக்கிறேன்
பிறகேன் வெளியே இடம்தேடுகிறாய் என
என்குள்ளே பேசுவதை 
யாரும் பார்த்து விடுவார்களோ என முகம் துடைப்பதுபோல் சேலைத்தலைப்பால் வெட்கம் துடைக்கிறேன்

பதிவு : கௌரீஷன்
நாள் : 5-Apr-21, 10:21 pm

மேலே