எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஊடகங்கள் , செய்தித்தாள் மற்றும் கேள்விபடும் செய்திகள் ,காட்சிகளை...

ஊடகங்கள் , செய்தித்தாள் மற்றும் கேள்விபடும் செய்திகள் ,காட்சிகளை பார்க்கும்போது கொரோனா பற்றிய அச்சமும் வருத்தமும் அதிகரிக்கிறது . பாதிப்பு மட்டுமன்றி யிரிழப்புகள் நாளுக்கு நாள் கூடுகிறதே தவிர சற்றும் குறையவில்லை . நன்கு அறிந்தவர்கள் நட்பு வட்டம் மற்றும் உறவுகள் பாதிப்பதும் , அதில் சிலர் உயிர் இழப்பது என்பதை நினைக்கும் போது, கொரோனா எனும் கொடிய அரக்கனுக்கு எப்போது முடிவுக்கு வரும் என்ற ஆதங்கம் மேலோங்குகிறது . இதற்கு முடிவுரை எழுதும் காலம் எப்போது வரும் என்று தெரியவில்லை.


அதைவிட கொடுமை மக்களுக்கு தடுப்பூசிக்கு இந்த அளவு தட்டுப்பாடு வந்திருப்பது. மேலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதியும் , ஆக்சிஜன் போதிய அளவு இல்லாமல் இருப்பதும் தான் . நாம் நாட்டில் தான் வசிக்கிறோமா அல்லது காட்டில் வாழ்கிறோமா என்று புரியவில்லை. இந்த நேரத்தில் வளர்ச்சி அடைந்த வல்லரசு நம் நாடு என்று கூறுவது வெட்கக்கேடு . 

இந்த காலகட்டத்தில்  தேவையின்றி சிலைகள் அமைப்பது , புதிய பாராளுமன்றம் கட்டுவது போன்ற காரியங்கள் தேவைதானா என்ற கேள்வியும் அனைவரின் மனதில் எழுகிறது. வெளிநாடுகள் நம்மை பார்த்து கேலி செய்வதும் குறை கூறி செய்திகள் வெளியிடுவதும் பார்க்கும் போது உள்ளம் உடைகிறது . 

இந்த மூன்றாம் உலகப்போர் என்று முடிவடையும்?ஏழை, பணக்காரன், சாதி மதம் என்ற பிரிவினை இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு மரணிப்பது வேதனையாக உள்ளது. நாடு சுடுகாடாக மாறி வரும் குழல் உருவாகி விடுமோ என்ற கவலை எழுகிறது. 


காலம் தான் பதில் சொல்ல வேண்டும் !

பழனி குமார்  

நாள் : 13-May-21, 3:02 pm

மேலே