எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பு வேண்டுகோள்... ***************** கொரானா எனும் கொடிய அரக்கன்...

அன்பு வேண்டுகோள்...

*****************

கொரானா எனும் கொடிய அரக்கன் அழிவது எப்போது ?மனித உயிர்களை பலி வாங்கும் உயிர் கொல்லி மரணிப்பது எப்போது ?

மக்கள் அச்சம் நீங்கி , மகிழ்ச்சியுடன் மண்ணில் சுதந்திரமாக இயங்குவது எப்போது ?

தொற்றுப் பரவலும் , மனித இனம் உயிர் இழப்பதும் அடங்குவது தான் எப்போது ?

ஊரடங்கே இல்லாத நிலை நமது நாட்டில் நிலவிடும் காலம் எப்போது ?

அனைத்து மக்களும் நோய் தாக்குதல் இன்றி நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவது எப்போது ?

இது போன்ற கேள்விகள் ஒவ்வொருவர் நெஞ்சில் எழாமல் இல்லை...இதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது...நோயால் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, மருத்துவ மனைகளில் படுக்கை கிடைக்காமல், ஆக்சிஜன் இல்லாமல், தகுந்த மருந்து தடையின்றி பெற முடியாமல் தவிக்கும் மக்களின் அவல நிலை கண்டு கண்ணீர் சிந்தும் சூழ்நிலை உருவாகி இருப்பது வேதனையின் உச்சம்...

இவை அனைத்திற்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும் எனில், மக்கள் ஊரடங்கு விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது ஒவ்வொருவரின் கடமை!இன்னும் அரசியல் பேசாமல், முந்தைய அரசு, தற்போது உள்ள அரசு என்று குற்றம் குறைகளை கூறிக் கொண்டு இருக்காமல், அதற்கான வழிமுறைகளை பின்பற்றுவது , பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நோய் பரவலும் உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருவது மிகவும் கவலையும் அச்சத்தையும் தருகிறது. நாம் வாழ, நமது அடுத்த தலைமுறை நலமுடன் வாழ, அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

இந்த எண்ணத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நிச்சயம் வெற்றி காண்போம். அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு தந்து , விரைவில் இந்த கொடுமையான காலத்தை கடந்து விடுவோம். 

அன்று ஆதிக்க வெறி பிடித்த ஆங்கிலேயர் ஆட்சியை விரட்டியடிக்க நமது முந்தைய தலைமுறை எப்படி பாடுபட்டதோ, சாதி மதம் என்ற பிரிவினை பாராமல் இணந்து போராடியதோ ,

அதே முறையில் நாம் இந்த கொரோனா எனும் கொடியவனை அழிக்க சபதம் ஏற்போம். தமிழக அரசு தற்போது எடுத்து வரும் முயற்சிகளுக்கு, இரவு பகலாக உழைக்கும் மாண்புமிகு முதல்வர் முதல் களப்பணி ஆற்றிடும் அத்துனை நல்ல உள்ளங்களின் சேவையைப் பாராட்டி அவர்களுக்கு உறுதுணையாக நிற்போம்.

வாழ்க நலமுடன் வளமுடன்.. !


பழனி குமார் 14.05.2021  

நாள் : 15-May-21, 8:06 am

மேலே