எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மலைப் பேசுகின்றேன் பூமி உமிழ்ந்த நெருப்புத் திமில் நிலவைத்...

மலைப்  பேசுகின்றேன்

பூமி உமிழ்ந்த நெருப்புத்  திமில் 
நிலவைத்  தொட பூமா தேவி நீட்டியக் கரம் 
மரங்கள் போர்த்திய உயர்த்த சிம்மாசனம் பேசுகின்றேன்.

மழை மேகம் என்னை பனிநீர் தெளித்து எழுப்பி விடும்  
 கதிரவனின் முதல் கதிரை  என் முகத்தில் வீசுவான் 
என் மேனியில் ஓடும் அருவி என்னை தூய்மையாகும் 
தென்றல் காற்று என் தேகம் தழுவி செல்லும் 
மேகங்கள் என்மேல் அடையில் அமர்ந்து மழையை பொறிக்கும் 
பச்சை மரங்கள் எனக்கு மேலாடை உடுத்தும் 
கனிம வளங்கள்  என் நுரையீரலில் நுட்பமாக நுரைத்திருக்கின்றது 
தொன்மக்களை என் தோளில் சுமந்து நிற்கின்றேன் 
வனவிலங்குகளை வளமுடன் வாழ வைக்கின்றேன் 

சாலையிட்டு என் மெய்யை காயப்படுத்துகிறார்கள் 
என்னில் இருக்கும் கனிமங்களை களவாடுகிறார்கள் 
நான் பாலூட்டி வளர்த்த விலங்குகளை வேட்டையாடுகிறார்கள் 
நான் புற்றுநோய் வந்த நோயாளி போயிருக்கிறேன் 
வாகன புகையால் என்  சுவாசம் பாதிக்கப் படுகிறது

மனிதா! 
பாதுகாக்காவிட்டாலும் 
பத்திரப்படுத்தாவிட்டாலும் 
பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாமே!

நாள் : 6-Jun-21, 9:19 am

மேலே