எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*கவிதை ரசிகன்* எழுதிய _மரணத்தை வென்ற_ _ தமிழ்_...

*கவிதை ரசிகன்* எழுதிய


_மரணத்தை வென்ற_
_ தமிழ்_

*தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த நாள் இன்று....*

நம்
தாய்மொழி தமிழ்
முடிசூடா மன்னானகவே!
எவ்வளவோ காலம்
வலம் வந்தது....
ஆனால்
இன்று தான்
முறையாக
உலக சிம்மாசனத்தில்
அமர வைத்து
செம்மொழி
மணிமகுடத்தைச் சூட்டி
கௌரவித்த
அந்த வரலாற்றுச்
சிறப்புமிக்க நாள் .....!
தமிழர்களின் .
நீண்ட நாள் கனவு
நிறைவேறிய நாள்.... !

தமிழர்களின்
தாய்மொழி தான்
தமிழ் என்று
பலரும் நினைத்துள்ளனர்...
ஆனால்
பல மொழிகளுக்கும்
தாய் மொழி
தமிழ்தான் என்று
வரும் காலம் உணர்த்தும்..... !

'யாமரிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிமை கண்டதில்லை' என்று
பாடினான்
மாகவி பாராதியார்....
ஏனெனில்?
அவன்
காற்றை சுவாசித்து
வாழவில்லை
தமிழ் கவிதையை சுவாசித்து
வாழ்ந்தவன்.....!

'தமிழுக்கு
அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத்
தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்'என்று
பாடினான்
பாவேந்தர் பாரதிதாசன்
ஏனெனில்?
அவன்
உணவால் வாழவில்லை
தமிழ் உணர்வால்
வாழ்ந்தவன்.....


அந்தப்
பரம்பரையில் வந்த
நாம்தான்
தமிழ்ப்பள்ளியில்
படிப்பதும்
தமிழ் பேசுவதும்
கேவலம் என்று நினைத்து
அந்நிய மொழிக்கு
விசிறி
விசிறி கொண்டிருக்கிறோம்...

தமிழ் பேசிய பிறகு
தேனைச் சாப்பிட்டாலும்
கசக்குமடா....
தமிழை வாசித்த பிறகு
வீணையை வாசித்தாலும்
வெறுக்குமடா......
காலத்திற்கு
அடுத்தப்படியாக
இந்த உலக்தத்தில்
மரணம் இல்லாதது
எதுவென்று கேட்டால்
தயங்காமல்
தமிழ் என்று சொல்லுங்கடா!

சிங்கப்பூர்
மலேசியா
ஆஸ்திரேலிய போன்ற
அந்நிய நாடுகள்
தமிழை
கொடிக்கட்டி
பறக்க விட்டுப் பார்த்து
பரவசமடைகிறது....
ஆனால்
நாம்தான்
தமிழ் கொடியை
அரைக் கம்பத்தில் கட்டி
அஞ்சலி செலுத்தவே
ஆசைப்படுகிறோம்.....

கற்காலத்தில்
தோன்றிய தமிழ் மொழி
கம்யூட்டர் காலத்திலும்
இணையத்தை
கலக்கிக் கொண்டிருக்கிறது என்றால்
அதன் வலிமையை
தமிழனே!
உன்னால்
உணர முடியவில்லையா?

தமிழ்வழியில் கற்று
தரணியில்
புகழ் பெற்றவர்களின்
பெயர்களை
வரிசையாக எழுதினால்....
வரலாற்றில்
பக்கங்கள் பற்றாது.....

நாம்தான்
தமிழில் படித்தால்
வேலை கிடைக்காது என்று ஆங்கிலப் பள்ளியில்
பொருட்களை
அடமானம் வைத்து
பிள்ளைகளைப்
படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்....!

அன்னியர்
நம்மிடம்
தமிழில்
பேச வேண்டும் என்று
நினைக்கும் நாம்....
நம் பிள்ளைகள்
ஆங்கிலத்தில்
பேசவேண்டும் என்று
நினைப்பது
நமக்கே
கூச்சமா இல்லையா?

அன்னையர்
திக்கித் திக்கி
பேசும் தமிழை
ரசித்துப் பாராட்டுகின்றோம்...
நம் பிள்ளைகள்
அழகாகப் பேசும் தமிழை
அலட்சியம் செய்கிறோம்
இது நமக்கே
வெட்கமாக இல்லையா ...?

ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம்
என்பது போல்
தமிழ் மொழியின்
வலிமை திறமை
பெருமை அருமை
மென்மை இனிமை
உண்மை புதுமை இவற்றிற்கெல்லாம்....கன்னியாகுமரியின்
கடல் பாறையின் மீது
குன்றின் மேலிட்ட
விளக்காய் நிற்கும்
திருவள்ளுவர்
சிலையை சாட்சி....!!!

இனியாவது
விழித்தெழு தோழா !
சிங்கம் போல்
சிலிர்த்தெழு தமிழா!


படைப்பு

*கவிதை ரசிகன்*

நன்றி!

நாள் : 6-Jun-21, 6:20 pm

மேலே