எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கை என்பதை, ஒரு கோணத்தில் நோக்கினால், அது முக்கியமான...

                       வாழ்க்கை என்பதை, ஒரு கோணத்தில் நோக்கினால், அது முக்கியமான சில நாட்களில், நம் வாழ்வில் நிகழ்ந்த/நிகழும் சம்பவங்களின் சிறப்பு செய்தித் தாள்!

முதலாவதாக. இவ்வுலகில் நாம் அவதரித்த நாள், நம் பெற்றோருக்கு உவகை தந்த ஒரு மிகவும் சிறந்த நாள்! நாம் முதன் முதலில் பள்ளிக்கூடம் சென்று வந்தது நிச்சயமாக ஒரு  முக்கியமான (சோதனையான?) நாள்!வகுப்பில் எப்போதாவது, ஒரு பாடத்திலோ அல்லது எல்லா பாடத்திலேயும் முதலாக வந்திருந்தால் அது பள்ளிப் பருவத்தின்   பொன்னாள்!

பள்ளி, கல்லூரி விளையாட்டுகளில் பங்கேற்று, நம் ஒருவரின் பங்கினால் நம் அணி வெற்றி வாகை சூடியிருப்பின், அந்நாள் நிச்சயமாக உவகைக்குரிய  நாள்!
கல்லூரியில் ஆட்டம், பாட்டம், விளையாட்டு, பல்சுவை போட்டி என்று கலந்து கொண்டு, அதனால் கல்லூரியில் கொஞ்சம் பேரும் புகழும் பெற்றால், ஆஹா,அந்த நாள் அமர்க்களமான நாள்!

பட்டப் படிப்பில் அமோக வெற்றிவாகை சூடினால், ஏன் வெறும் வெற்றி பெறுறாலும்,   அதுவும் ஒரு பெரும் வெற்றியின் நாள்!
நம் சொந்தக் காலிலேயே நிற்க, சரியான உத்தியோகம்/தொழில் அமைந்த நாள், சந்தேகமில்லாமல் ஒரு அற்புதமான நாள்!

நாம் அன்பும் காதலும் கொண்ட ஒரு பெண்ணையோ இல்லை பெரியவர்கள் ஏற்பாடு செய்து, நமக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்யும் நாள், வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை தரும் விசேஷமான நாள்!

அதன் பிறகு, இருக்கவே இருக்கிறது, தேனிலவு, வளைகாப்பு, சீமந்தம், முதல் குழந்தை இரண்டாம் குழந்தை என்று வரிசையாக நீண்டு கொண்டே போகும் சிறப்பு நாட்கள்! அலுவலகத்தில் பதவி உயர்வு பெறும் நாட்கள், குடும்பத்துடனும் மிக நெருங்கிய நண்பர்களுடனும் உல்லாச சுற்றுலா சென்று வந்த நாட்கள்!

நம் செய்கைகள் மூலமாக எவருக்காவது  பயனாக இருந்திருந்தால் செய்து, அது ஒரு சாதனை செய்தது  போல நாம் உணர்ந்த அந்த அருமையான நாட்கள்! இது போல எவ்வளவோ நாட்கள்! ஆனாலும் இவை வாழ்க்கையின் குறுகிய சில நாட்களே! இந்த மாதிரி நாட்கள் தான், நாம் பிறந்த பயனை உணர வைத்து, நம்முடைய வாழ்க்கையை நியாயப்படுத்தும் அற்புதமான நாட்கள்!

மேற்கூறிய அனைத்து முக்கிய நாட்களும் நிகழ மிகவும் அடிப்படையாக விளங்கும் நாள் எது தெரியுமோ? சந்தேகம் இல்லாமல், நாம் பிறந்த  நாளே! அதாங்க நம்மளோட Happy Birthday! இந்த நாள், ஒவ்வொரு வருடமும், நாம் எப்படி வாழ நினைத்தோம், ஆனால் எப்படி வாழ்ந்தோம், இனி எப்படி வாழ வேண்டும் என்று தீவிரமாக சிந்தனை செய்து, தகுந்த செயல் புரிதலை ஊக்குவிக்கும் மிக உன்னதமான திருநாள்!

எனவே, யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும். உங்க இனிய பிறந்த நாளை மிகவும் மிகழ்ச்சியுடன், ஜம்முன்னு புது உடை அணிந்து, உங்களுக்கு பிடித்த மக்களுடன் ஜாலியாக கொண்டாடி மகிழுங்கள்! கேக் கட் பண்ணுங்க, ஜோக் கட் பண்ணுங்க, ஆனா, நோஸ் கட் பண்ணாதீங்க! எந்த வயதானாலும் பிறந்த நாளைக் கொண்டாட மறக்க வேண்டாம். வருடம் இரு முறை ( ஆங்கிலம்+ ஜன்ம நட்சத்திரம்) வரும் இந்நன்னாளில் உங்கள் உள்ளூர இருக்கும் நண்பருடன் உறவாடி, உண்மையான வாழ்க்கையின் குறிக்கோளை கண்டு கொண்டு, அதை நிறைவு செய்யும் முயற்சியில் எப்போதும் இருங்கள்! சிரிப்பவராக இருந்தால் இன்னும் சிரியுங்கள்! சிரிக்காதவராய் இருப்பின் சிரிக்க ஆரம்பியுங்கள்! சிரிப்பை வாழ்நாள் முழுதும் தொடருங்கள்! சிரிப்பும் நகைச்சுவையும் இருந்தா என்றுமே கொண்டாட்டம் தான்! அட, கொஞ்சம் சிரிங்களேன்!!! இப்போ என்ன அழகாக இருக்கிறது உங்க முகம்??? எனவே, சிரிங்க! ஒவ்வொரு நாளையும் கொண்டாடுங்க!

இன்று எவருக்கெல்லாம் பிறந்த நாளோ அவர்களுக்கு என் கனிவான பிறந்த நாள் வாழ்த்துக்கள்! எவருக்கெல்லாம் பிறந்த நாள் இல்லையோ அவர்களுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!👏👏👏👏👏

ஆனந்த ராம்      

பதிவு : Ramasubramanian
நாள் : 15-Jun-21, 1:18 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே