கருவின் மொழி +++++++++++++++++ கருவின் உள்ளே ஏது மொழி...
கருவின் மொழி
+++++++++++++++++
கருவின் உள்ளே ஏது மொழி
அம்மா உண்ணும் உணவினை பெற்று
தொப்புள் வழியே அதை உண்டு
அவ்வப்பொழுது உதைத்து அங்கே சுழன்று
அம்மாவுக்கு ஆனந்தத்தையும் வலியையும் தந்திடும்
அந்தக் கருவில் வசித்திடும் உயிரே!
இரத்தக் கட்டியாய் முதலில் தொடங்கி
வளர்ச்சிகள் பல பெற்று வளர்ந்து
சரியான நேரத்தில் மண்ணில் குதித்திடுமே!
உதைப்பதே இதனின் பேசும் மொழி
செவிகள் மட்டும் கேட்டு இருக்கும்
அம்மாவின் பேச்சை கேட்டு பழகியதாலே
பிறந்ததும் அழுகும் இவர்களின் இதழ்கள்
அம்மாவின் குரல் கேட்டதும் அமைதியாகுமே!
இறைவனின் படைப்பின் அற்புதம் கருவின் குழந்தைகளே!
கூ.மு.ஷேக் அப்துல் காதர்