எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நட்ப்பின் தட்பவெப்பம் ----------------------------------- மாணவப் பூக்கள் பூத்துக் குலுங்கும்...

நட்ப்பின் தட்பவெப்பம்
-----------------------------------
மாணவப் பூக்கள்
பூத்துக் குலுங்கும்
பூந்தோட்டம்

பூக்கள் அனைத்தும்
ஆகாயத்தையே
அண்ணாந்து பார்த்தபடி

கருமேகம் சூழ்ந்த வானம்
மறுவார்த்தை இல்லா மவுனம்
மலர்களின் மனசுக்குள் மட்டும்
மின்னலும் இடியும் ...

இறுக்கம் கலைக்க
இறங்கி வந்தது
நட்ப்பின் தூறல்

அமைதி காத்த
பூச்செடிகள்
ஆர்ப்பரிக்கத் துவங்கின
 தென்றலும் அங்கே
கண்ணாமூச்சி ஆடியது

தூறல் வலுத்தது
மகிழ்ச்சியே அங்கே
மழையாய் பெய்தது

நட்பின் வெள்ளம்
கால் அளவல்ல...
கழுத்தளவல்ல...
அத்துணை பேரின்
மனத்தளவாய் இருந்தது

அங்கே
மெழுகுவர்த்தியில்கூட
நட்ப்பின் ஒளி வீசியது
எல்லா நாக்கிலும்
நட்ப்பின் சுவை இனித்தது
நனைந்து திளைத்த
நறுமணப் பூக்கள் நடுவே
மழையாய் வந்த மலரும்
மகிழ்ச்சியில் திளைத்தது

உலகம் திரும்பிச் சுற்றிய
இந்த நிமிடங்களில்
நானும் குழந்தையானேன்

என்னை மழலை ஆக்கிய
இறைவா
உனக்கும் என் நன்றிகள்.
 



நாள் : 6-Jul-22, 3:38 pm

மேலே