எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எதைப் பார்த்தாலும் உன்னைப் போலவே தெரியும் என் காதல்...

எதைப் பார்த்தாலும் உன்னைப் போலவே தெரியும் என் காதல் பிழை நீ...!🤔

எட்டி நின்று நீ பார்க்கும் போதெல்லாம் கிட்டவந்து கொஞ்ச சொல்கிறது உன் அழகு..🥰

விழுந்தால் மீள முடியாது என்று தெரிந்தும், உன் கன்னக்குழியில் விழ காத்திருக்கிறது என் காய்ந்த இதழ்கள்..😘

கொடுக்கத் தவறிய முத்தம் ஒன்று, கூட்டி கொண்டு இருக்கிறது தனது வட்டி கணக்கை..!😜
ஆம் அபி...!

தொல்லையாக இருக்கிறது, தொல்லை செய்யாமல் நீ தொலைவில் இருப்பது..!😌

தேவதைகள் பூமியில் வாழ்வதில்லை என்று சொன்னதெல்லாம் பொய்யாகிவிட்டது! பிரம்மன் உன்னை படைத்த பின்பு..!🧚

உன்னுடன் வாழ்ந்தால், என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதல்ல என் காதல்! 
உன்னுடன் மட்டும் தான் என் வாழ்க்கை என்பதே என் காதல்!❤️

                         இப்படிக்கு
                  உனக்கானவன்😁

பதிவு : iman
நாள் : 12-Nov-22, 10:42 pm

மேலே