எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

https://www.youtube.com/watch?v=GV8E90p7xkg பூக்களோடு ஒரு கைக்குலுக்கல் .... ================================= (சர்னா...

https://www.youtube.com/watch?v=GV8E90p7xkgபூக்களோடு ஒரு கைக்குலுக்கல் ....
=================================
(சர்னா கவிதை வாசிப்பு போட்டி - கவிதை )

நவீன உலகில் நவீனங்களின் இடையில்
நாமும் இயந்திரங்களோடு இயந்திரங்களாய்
சிறிதேனும் சிந்திக்க மறந்தவர்களாய்...
நாளும் சிரிப்பை இழந்தவர்களாய்..

பொருள் தேடும் குறிக்கோளே இலக்காகி
உறவுகளை உதறி... திசைக்கு ஒருவராய்
வாழாத வாழ்க்கை நிதமுமாய்....
வாழ்கிறோமா என்பதனை மறந்து!!!

நாளும் தொடரும் மூச்சிறைப்பு ஓட்டங்களில்
உறவுகளையும் சமூகத்தையும் சிடுசிடுத்து....
மனங்களை நோகடித்து.. நேயம் தொலைத்து
சுயநலவாதிகளாய் சுற்றியலைந்தபடி.. ..

எதற்கோ இந்த அவசரமும் படபடப்பும்
யாரும் விரட்டாமலேயே இத்தனை ஓட்டங்கள்
பரபரப்பில் அறிவதில்லை நோய்கள் காதலிப்பதை
நோய் நம்மை தினம் விழுங்கியபடி ...

ஜனன நாளினை பிறப்பில் அறிந்திருக்கிறோம்
மரணத்தை எவரேனும் அறிந்து சொன்னதுண்டா??
காத்திருக்கிறது கவருதற்கு விதவித வடிவினில்
இன்றோ.. நாளையோ...சொல்வதற்கில்லை!!!

இணக்கமான வார்த்தைகள் கற்றறிந்தோமா
கற்றறிந்தாலும் பேச்சினில் கொண்டோமா??
வினாக்களை எழுப்புங்கள் இன்றாவது
தெளிவிருந்தால் விடை தெரியும் நம்முள்ளே...

நன்றியும் மன்னிப்பும் நாவினில் இருக்கட்டும்
மனித நேயம் மனதில் நிலைக்கட்டும்
புன்னகை பூக்களோடு இன்றே புறப்படுங்கள்
கைகுலுக்குங்கள் உறவுகளோடு.. வாழ்க்கை சுகந்தமாய்...

======================================================================================================================================
(கீழே கொடுத்திருக்கும் இணைப்பிற்கு சென்றால் யார் வேண்டுமானாலும் கவிதை வாசிப்பை கேட்க முடிகிறது.
இதே பக்கத்திலேயே மேலே சென்று அம்பு குறியிடப்பட்ட (நாம் இருக்கும் பக்கத்தின் முகவரி / கவிதை எண் display ஆகும் இடத்தில்) கீழே கொடுத்திருக்கும் இணைப்பை அப்படியே copy paste செய்தால் காணொளியில் இந்த வாசிப்பை கேட்க முடிகிறது.
முயற்சித்துப் பார்க்கவும். நான் இரண்டு இணைப்பினை கொடுத்திருந்தேன். அதில் ஒன்றுதான் கேட்க இயலாத நிலையில் இருந்தது. அதனை நீக்கிவிட்டேன். கீழே உள்ள இணைப்பினை நான் கூறியதுபோல் முயன்று பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=GV8E90p7xkg

முயன்று பார்ப்பவர்கள் இந்த காணொளியில் கவிதை வாசிப்பை கேட்க முடிகிறதா என்பதனை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்)

பதிவு : C. SHANTHI
நாள் : 14-Jul-14, 1:01 pm

மேலே