எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழர் போர் அறம்: எப்பொழுதும் தமிழ் மன்னர்கள் ஆரம்பத்திலேயே...

தமிழர் போர் அறம்:

எப்பொழுதும் தமிழ் மன்னர்கள் ஆரம்பத்திலேயே போர் தொடங்குவதில்லை.
முதலில் நட்பு பாராட்ட வழியுண்டா என ஆராய்ந்து இயலாத போதுதான் போர் தொடங்குவர்.
மேலும் போரிடப்போவதை பகை மன்னரிடம் எச்சரித்துவிட்டே போர் தொடங்குவர்.

வெட்சி - போர் புரிய விழைவதை தன் பகை அரசனுக்கு தெரிவிக்கும் போது, மன்னரும் அவர் சார்ந்த உயர் நிலைபடைவீரரும் வெட்சி மலர் சூடியிருப்பர்.
வஞ்சி - நாட்டின் மீது படையெடுக்கும்போது, அரசனும் வீரரும் வஞ்சி மலர் (இலுப்பைமரம்) சூடியிருப்பர்.
உழிஞை - பகைவரின் அரண்களை தகர்க்கும் போது வீரர்களும் அரசர்களும் உழிஞை மலர் சூடியிருப்பர்.
தும்பை - போர்க்களத்தில் எதிர் எதிராக போர் புரியும் போது தும்பை மலர் மாலை சூடியிருப்பர்.
வாகை - போரில் வெற்றி பெற்று திரும்பும் போது அரசனும் அவரை சார்ந்த படையினரும் வாகை மலர் சூடியிருப்பர்.

பண்டைய தமிழர் போர் அறமாவது நேர் எதிர் போரையே விரும்புவர். இக்காலத்தை போல் கோழைகள் அல்லர்... வீரர்கள்..!

நாள் : 27-Aug-14, 6:36 pm

மேலே