எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் பாசத்துக்குரிய தலையனேயே, உண்மையில் நான் நன்றிகெட்டவன் எண்ணின்...

என் பாசத்துக்குரிய தலையனேயே,
உண்மையில் நான் நன்றிகெட்டவன்
எண்ணின் எத்துனையோ கண்ணீர் துளிகளை தாங்கிய
உனக்கு நான் தகுந்த முறையில் நன்றி சொல்ல தவறிவிட்டேன்,
நான் மதிப்பளிக்கவில்லை உனக்கு
விரைவில் என்னைவிட்டு பிரியப்போகும் நீ
எத்துனை முறை என்னை ஆறுதல் படுத்தி இருப்பாய்,
நன்றிசொல்ல வார்த்தைகளில்லை எனக்கு
எனது சோகங்களையும் வேதனைகளையும் நீர்ப்பாரமாய்
சுமந்த நீ ஒரு போதும் கனத்ததுமில்லை என்னை வெறுத்ததுமில்லை,
பிராத்தி நானும் பிராதிக்கிரைன்
தூரத்தில் தெரியும் அந்த வெளிச்சம் ஒருவேளை உனக்கு
விடுதலை தருவதாய் இருக்கக்கூடும்,.
ஏனனில் உன்னைப்போல் எனக்கு விமோர்ச்சணம் அளித்த
கூட்டம் மீண்டும் எனக்காக பிராத்தனை செய்வதாய் உணர்கிறேன்.
அல்ஹம்துலில்லாஹ்.

நாள் : 28-Aug-14, 12:45 pm

மேலே