சரியான விடையை தேர்வு செய்யுங்கள்

ஒருவர் காய்கறி வாங்க கடைக்கு செல்கிறார். தேவையான காய்கறிகள் வாங்கிவிட்டு கடைக்காரரிடம் மொத்தம் எவ்வளவு என்று கேட்கிறார். கடைக்காரர் 16 ரூபாய் என்கிறார். அந்த நபர் தன் பையில் இருந்த ஒரு 20 ரூபாய் நோட்டை நீட்டுகிறார். மீதம் 4 ரூபாய் கொடுக்க கடைக்காரரிடம் சில்லறை இல்லை. உடனே கடைக்காரர் அருகில் உள்ள டீக்கடைகரரிடம் அந்த 20 ரூபாய்க்கு சில்லறை வாங்கி, 4 ரூபாய் மீத பணத்தை காய்கறி வாங்கிய நபருக்கு கொடுக்கிறார். அதை வாங்கியதும் அந்த நபர் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். இரவு ஆகிவிட்டது. கடையை மூடும் நேரமும் ஆகியது. இப்போது அந்த டீக்கடைக்காரர் அந்த 20 ரூபாய் நோட்டை கவனிக்கும் போது அத கள்ள நேத்து என்று தெரிய வந்தது. உடனே அந்த நோட்டை காய்கறி கடைக்காரரிடம் திருப்பி கொடுத்து இது காலையில் நீ சில்லறை கேட்டு தந்த நோட்டு என்றும் அது கள்ள நோட்டு என்றும் சொல்லி வேறு ஒரு நல்ல 20 ரூபாய் நோட்டு பெற்று கொண்டார். இப்போது சொல்லுங்கள், அந்த காய்கறி கடைகாரருக்கு மொத்தம் எவ்வளவு நஷ்டம்.

சரியான விடையை தேர்வு செய்யுங்கள்

அ) 36 ரூபாய்
ஆ) 16 ரூபாய்
இ) 20 ரூபாய்
ஈ) 40 ரூபாய்



கேட்டவர் : aaru
நாள் : 14-Dec-13, 9:26 am
0


மேலே