சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா படைப்பு ஒரு விவாதம்

என்னுடைய சாத்திர பேசுகிறாய் என்னும் படைப்பு எழுத்து தளத்தில் வெளியாகி தள நிர்வாகிகளால் முதலில் அது நீக்கப்பட்டது. அப்படி நீக்கப்பட்டதற்கு காரணமாய் நிறைய பேர்கள் படைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாய் நிர்வாகிகள் எனக்கு விளக்கமும் அளித்தார்கள். அந்த விளக்கத்திற்கு பிறகு படைப்பின் மையப்பொருளை நிர்வாகத்திற்கு நானும் விளக்கினேன்.

என்னுடைய விளக்கத்திற்குப் பிறகு ஒரு இது சர்ச்சைக்குரிய பதிவு என்ற முன்னறிவிப்போடு மீண்டும் படைப்பினை நிர்வாகிகள் வெளியிடவும் செய்தார்கள்.

இப்போது என்னுடைய கேள்வி எல்லாம் ஒரு படைப்பு பிடிக்கவில்லை சரி இல்லை என்று சொல்லி கருத்து ரீதியாக அதை எதிர்க்கும் தோழர்கள் ஏன் அந்த படைப்பினை படைத்த படைப்பாளிக்கு எதிர்ப்பினை தெரிவிப்பதில்லை. தளத்தில் படைப்பாளிகளுக்கு மின்னஞ்சல் செய்ய வசதிகள் இருக்கின்றன மேலும் எதிர்ப்பினை கருத்துக்கள் வாயிலாகவும் தெரிவிக்க இயலும்.

படைப்பை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகத்திடமும் படைப்பு பற்றிய விளக்கத்தை படைப்பாளியிடமும் கேட்காமல் ஏன் முக்காடிட்டுக் கொண்டு தள நிர்வாகத்திடம் போய் பின்வாசல் வழியே புகார் செய்ய வேண்டும்...

1) பதிவை நீக்கிய பின்பு கருத்து சொல்ல இயாலாது என்பதால் மின்னஞ்சல் செய்திருக்கலாம்...

2) மீண்டும் அதே பதிவினை நிர்வாகம் ஒரு அறிவிப்போடு வெளியிடும் போது தங்கள் எதிர்ப்பினை கருத்து பெட்டியில் தெரிவித்து இருக்கலாம்...

ஆனால்.. இது எதுவுமே நிகழாமல் இப்போது அந்தப் படைப்பினை பார்த்திருப்பவர்கள் எண்ணிக்கை 53 ஆகி இருக்கிறது தேர்வு செய்தவர்கள் எண்ணிக்கை 23 ஆகி இருக்கிறது....

எங்கே எதிர்ப்புக் கொடி காட்டிய தோழர்கள்... ? எங்கே உங்களது கருத்து ரீதியான தர்க்கம்...? எங்கே உங்களது புரட்சிக் கொடி....

அந்தப் படைப்பினை எதிர்த்து நிர்வாகத்திடம் புகார் கொடுத்தவர்கள்.. இங்கே என்னிடம் விவாதிக்க வரலாம்...

இது கருத்து ரீதியான புரிதலை நமக்கு கொடுக்கும். ஒரு வேளை உங்களின் கருத்து என்னை மாற்றவும் செய்யலாம்...

காத்திருக்கிறேன்...!

பின் குறிப்பு: மிக உயரிய புரிதலோடு என்னை அரவணைத்துக் கொண்டிருக்கும் அகன் அண்ணா அவர்களுக்கும், எப்போதும் என் எல்லா படைப்புகளையும் ரசித்து விமர்சிக்கும் நண்பர் சந்தோஷ்க்கும், எழுத்து நிர்வாகத்திற்கும் எனது நன்றிகள்!கேட்டவர் : Dheva.S
நாள் : 3-Feb-14, 11:20 am
0


மேலே