தளத்திற்கு

புதிதாக கவிதை பழகுபவர்களுக்கும் மேலும் கவிதை திறனை மேம்படுத்தவும் எழுத்து தளத்தில் கவிதை பழக என்ற புதிய பக்கத்தினை இணைக்கலாமே அதில் ஹைக்கூ எழுதுபவர்களுக்கு அது எப்படி இருக்க வேண்டும் மற்றும் அதற்கான விதிமுறைகளையும் விளக்குவது போலவும் அதற்க்கான சிறந்த ஹைக்கூ கவிதைகளை மாதிரியாக இணைக்கலாம்.. அதுபோல் புதுக்கவிதையில் உவமை , உருவகம், முரண் , படிமம் , எதுகை மோனை , சிலேடை, போன்றவைகள் என்ன என்பதை விளக்குபவதாகவும் அதற்கான மாதிரிகளை இணைப்பதாகவும் இருந்தால் எல்லோருக்கும் பயனளிப்பதாய் இருக்கும்...

மேலும் மற்ற உறப்பினர்கள் கூட இதற்க்கு தேவையான தகவல்களை இணைப்பதற்கு வழி செய்யலாம்


இதற்க்கு தங்கள் கருத்து என்ன தோழர் தோழமைகளே?



நாள் : 17-Mar-15, 7:56 pm
0


மேலே