என்ன ஆயிற்று தளத்திற்கு

கொஞ்ச நாட்களாக நான் தளத்தில் சரி வர கவனம் செலுத்தாமல் சொந்த அலுவல் காரணமாக ஒதுங்கி விட்டேன். தற்போது நிறைய புது படைப்பாளிகள் தளத்தில் வந்து சேர்ந்துள்ளனர்.மிக்க மகிழ்ச்சி.ஆனால் புதிய படைப்பாளி எனினும் அவர்கள் படைக்கும் படைப்பு எப்படி இருந்தாலும் அதிக பார்வைகள் கிடைப்பதை எண்ணி மகிழ்ந்தேன்.ஆனால் அதே நேரம் அவர்கள் புதிய படைப்பாளிதானா இல்லை வேறு பெயரில் தளத்தில் நுழைந்து தன்னுடைய படைப்புகளைப் படிக்க அழைப்பு அனுப்பி அதனால்தான் இத்தனை பார்வைகள் அவர்களுக்கு கிடைக்கிறதா என எனக்கு ஐயப்பாடு எழுந்தது. எழுத்து தளம் படைப்புகளை விட பார்வைகளின் முக்கியத்தை முதன்மையாக கணிணி வழி கசக்கெடுப்பின் மூலம் சிறந்தவை என பட்டியலிடும் பக்குவத்தை இன்னும் மாற்ற வில்லை என்ற வேதனையில் இந்த பதிவை கேள்வியாக கேட்கவேண்டிய நிர்ப்ந்தத்தில் கேட்கிறேன்.
தளம் என்பது கணிணியா ?
தளத்தில் குழுமம் உள்ளதா ?
இங்கு படைக்கப் படும் எம் பதிவு இங்கேயே திருடப் பட்டு மீண்டும் பதிவிடப் படும் போது நாங்கள் மேற்கொண்டு எந்த தைரியத்தில் படைப்பை பதிவிடுவது ?
ஒரு வேளை எம் பதிவிற்கு காப்புரிமை (?!!!) தளம் தருவதாய் இருந்தால் அதற்கான தகுதி இந்த தளத்திற்கு உண்டா ?
மேற்கொண்டு எமது கற்பனையை (களவாடப் பட மாட்டாது) துணிந்து பதிவிடலாமா ?
இந்த தளம் தமிழின் பெயரால் மற்றுமொரு வியாபார களமாகி விட்டதா ?

குறிப்பு :- பிறர் படைப்புகளுக்கு குறைந்த பட்சம் 4000 கருத்துகளாவது பதிவு செய்தவர்கள் மட்டும் பதில் தரவும்.



நாள் : 9-May-15, 9:32 pm
0


மேலே