நிர்வாகம் இதை கண்டுக்கொள்வதில்லையோ ?

வெகுநாள் பிறகு வந்து பார்த்தேன் நான் பார்த்த அழகிய கவிதை தளமான இத்தளம் ஏனோ அதன் உண்மை முகமிழந்து காணப்பட்டது ........... இறுதி தேர்வு பட்டியலில் அன்று இடம் பிடித்தால் நிச்சயம் அது ஒரு சிறந்த கவிதையாகவோ அல்லது படிக்க ஏற்ற கவிதையாகவோ இருக்கும் ஆனால் இன்று வருத்தமாக உள்ளது.

நிர்வாகம் இதை கண்டுக்கொள்வதில்லை போல தெரிகிறது ஒரு ரசிகனால் கூட ஏற்க இயலாது ........... இவைகளை பார்த்தால் இங்கு வரக்கூட தோன்றுவதில்லை .......... மன்னிக்கவும் நண்பர்களே முன்பிருந்த பலர் இன்று இங்கு இல்லை ஏனோ இன்று நானும் அந்த முடிவையே எடுக்கலாம் என நினைத்த போது சில நல்ல கவிதைகளையும் கண்டேன் மனம் ஆறுதல் பெற்றது .............

அதே போல ஒரு கவிதையை படித்து கருத்திடுகையில் ஆகா அருமை அற்ப்புதம் என சொல்வதைவிட உண்மையில் அந்த கவிதையின் பொருளை உணர்ந்து அதற்க்குக் தகுந்த விமர்சனத்தை தந்தால் படைப்பவர் வளருவார் என இதற்க்கு முன் இங்கிருந்த ஒருவர எனக்கு சொல்லிய அறிவுரையை அப்படியே சொல்கிறேன் .......... தனது படைப்பிற்கு அவர் வர வேண்டும் விருப்பம் பெறவேண்டும் அல்லது மனம் புண்படாது இருக்க என பொய்யாய் அருமை அற்புதம் என கருத்திடுவது வருத்தத்தை தருகிறது . கவிதையின் தரம் விமர்சகனால் உயர்த்தப்படவேண்டும் ................... கிணற்றில் தள்ளக்கூடாது .......

கவி எழுதியவன் கம்பன் என்றாலும் கவியின் பொருள் தவறுமேயானால் தவறு என சொல்பவனே உண்மையான விமர்சகன் முன்னேற்றம் தருபவன். இது சரியா .................?
நன்றி



கேட்டவர் : கி கவியரசன்
நாள் : 21-May-15, 1:07 pm
1


மேலே