இதுதான் கவிஞனின் கடமையா ?

மொழியே தெரியாத ஜி.யு.போப்க்கும் ,வீரமாமுனிவருக்கும் எப்படி தமிழ் புரிந்திருக்கும்? சங்க இலக்கியங்களை எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்திருப்பார்கள்?

முழுமையான செந்தமிழ் ஆதிக்கம் மட்டுமே நிரம்பி வழியும் திருக்குறளும் ,புறநானூறும்,அகநானூறும் எட்டுதிக்கும் பரவியதின் விந்தை என்ன ?

பலபல மொழியியல் வல்லுநர்களை பைந்தமிழ் மட்டுமே நிரம்பி வழிந்த மரபு பாக்கள் எப்படி தன்பக்கம் இழுத்திருக்கும் ?

தமிழை அறிய மட்டுமல்ல சுவைக்கவும் வைப்பது ஒவ்வொரு கவிஞனின் கடமை என்பதை மறந்தது ஏனோ ?

பிறமொழி கலப்பும் ஆங்கில ஆதிக்கமும் அதிகரித்து வரும் கவிதைகளை எழுதி வரும் கவிஞர்களின் பதில், "இதைபோல் வடித்தாலொழிய தமிழை வளர்க்க முடியாது புரட்சியை தூண்ட முடியாது "
இதுதான் கவிஞனின் கடமையா ? தமிழ் வளரும் முறையா ?



கேட்டவர் : பிரியாராம்
நாள் : 10-Jul-15, 11:18 am
0


மேலே