லாகின் செய்வதில் கோளாறு

வணக்கம்.

டெக்ஸ்டாப்பில் எனது உறுப்பினர் கணக்கிலிருந்து லாகின் செய்வதில் அவ்வப்போது தகராறு செய்கிறது. பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் சொடுக்கினால் எந்த இயக்கமும் இன்றி.." page not available " என பிழைச் செய்தி காட்டுகிறது. பிறகு சில மணி நேரத்திற்கு பின் முயற்சி செய்தால் லாகின் ஆகிறது.

ஆனால் அதே சமயத்தில் மொபைலில் லாகின் செய்வதில் எவ்வித சிரமும் இல்லை.

டெக்ஸ்டாப்பில் நான் பயன்படுத்தும் உலாவி. குரோம் மற்றும் பயர் பாக்ஸ். இரண்டிலும் இதே பிரச்சினை இருந்தது. மற்ற இணையத்தளங்கள் யாவும் நன்றாக இந்த உலாவிகளில் இயங்குகிறது.. இணையதள வேகம். 3ஜி மற்றும் பிராட் பேண்ட் இரண்டும் உபயோகப்படுத்துகிறேன்.


எழுத்து தள தகவல் தொழில் நுட்ப தோழர்கள் இதற்கு உண்டான சிகிச்சையை அளிக்கவும். அல்லது பரிந்துரை செய்யவும் என கேட்டுக்கொள்கிறேன்.


ஆனா ஒரு டவுட் எனக்கு மட்டும் ஏன் இப்படி அடிக்கடி தகராறு நடக்குதுன்னு புரியல

தளத்திலிருந்து இமெயில் ஒரு வருடமா வருவது இல்ல.
மொபைல்ல படைப்புக்கள் , படங்கள் இணைப்பதில் சிரமம்.
இப்போ லாகின் பிரச்சினை..


நன்றி .!


- இரா.சந்தோஷ் குமார்.நாள் : 16-Feb-16, 6:57 pm
0


மேலே