நம் கடன் அடைவது எப்போது?

தமிழ்நாடு தற்போது 2 ஆயிரம் கோடிக்குமேல் கடனில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.
ஆனால், தமிழக அரசு தற்போது அந்த கடனில் இருந்து மக்களைக் காப்பாற்றாமல் இலவசபொருட்களை அள்ளி வழங்கி மேலும் கடனை அதிகப்படுத்தப் பார்க்கிறதே. எத்தனையோ இலவசத் திட்டங்களில் கையெழுத்திட்ட அரசு நான் ஆட்சியில் இருக்கும் போது நம் மாநிலத்தின் கடன் சுமையை படிப்படியாக அல்லது ஒரு குறிப்பிட்டத் தொகையை செலுத்தித் தீர்த்து நம் தமிழ் நாட்டை கடனில் இருந்து மீட்டு எடுப்பேன் என்ற ஒரு உறுதிமொழியை ஒரு அரசியல் கட்சித் தலைவர்களும் எடுத்ததாக நான் இதுவரையில் படித்தது இல்லை .

மேலும், அம்மா பதவி ஏற்றதும், நம் தமிழ் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்றார். அதற்கு முதல் தடை கடனும் தானே. அதை அடைத்தாலே நாம் ஓரளவு வளர்ச்சிப் பாதையைத் தொட்டு விட்டோம் என்று தானே பொருள் .

நம் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையை எட்ட இலவசங்கள் அவசியம் இல்லை. தன்மானம் அவசியம்.
தரமான கல்வி அவசியம், உடல் நலம் அவசியம், அதற்கு விவசாயம் அவசியம், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், முதல் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட
வேண்டும்.

ஏனெனில் , நம் தலைவர்களான தன்மானச் சிங்கங்கள் நமக்கு ஊட்டிய வீரப் பால்

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா

என்பதே , நாம் தலை நிமிர்ந்து நிற்க கடன் ஒரு தடையாக உள்ளது எண்ணி ஒரு தமிழனாக நான்
வெட்கப்படுகிறேன் . அந்தக் கடன் அடையும் வரை நாம் நம் நாட்டின் சுதந்திரப் பறவைகள் அல்ல .
என்பது போன்ற உணர்வு மேலோங்குகிறது . கடனில் மூழ்கும் அணிகலன்களாக நாம் இருக்கக் கூடாது . நம்மை மீட்டெடுக்க நம் தலைவர்கள் முன்வர வேண்டும் . அது எப்போது என்பதே ஒரு
குடிமகளான எனதுக் கேள்வி?



கேட்டவர் : PJANSIRANI
நாள் : 30-May-16, 7:48 am
0


மேலே