தண்ணீர்ப் பஞ்சம்

தண்ணீர்ப் பஞ்சம் | கேள்வி பதில்கள் | Eluthu.com

வருமுன் காப்போம்!

சென்ற வருடம் கொட்டித் தீர்த்த மழையால், சென்னை நகரம் ஒருவாரத்திற்கு மேல் தண்ணீரில் மிதந்தது. மிகுந்த தண்ணீரெல்லாம் வடியக்கூட வழியில்லாமல், நகரத்தின் சாலையெங்கும் தேங்கி நின்று, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

மாநகரத்திற்கு குடிதண்ணீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிந்த நிலையில் உபரி நீரைத் திறந்து விடும்போது, கையிருப்பில் வைக்கவேண்டிய நீரையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக திறந்து விட்டதால், இப்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

இதற்கு ஏதாவது உபயோகமான ஆலோசனை உங்களிடம் இருக்கிறதா?..

தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் தண்ணீர்ப் பஞ்சம்தீர வலுவான வழிமுறைகள் இருக்கிறதா?..

வரும் மாதங்களில் தண்ணீர்பற்றாக்குறையை எப்படி சமாளிக்கப்போகிறோம்?..

மாநகரக் குடிமக்களுக்கு உபயோகமான முறையில், உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்.


பதில் அளி
0 கேட்டவர் : பெருவை பார்த்தசாரதி , 5-Mar-17, 8:44 pm
Close (X)


மேலே