அன்புடன் எழுத்து குழுமத்திற்கு

தொழில் நுட்ப வேலையின் காரணமாக மாதாந்திர போட்டிகளை நிறுத்தி வைத்து இருக்கிறீர்கள். இவை எப்போது சரி செய்யப்படும்? மாதாந்திர போட்டிகள் இல்லாதால் பல எழுத்தாளர்கள் ஆர்வம் குறைந்து தளத்திற்கே வருவதில்லை.... பல படைப்புகள் பார்க்கப்படுவது கூட இல்லை.... இதற்கு முன்னர் ஒரு திருவிழாவைப் போல் இருந்த எழுத்து தளம் இப்பொழுது கலை இழந்து காணப்படுகிறது.... எழுத்து தளம் நாளுக்கு நாள் வளர வேண்டும் ஆகவே எழுத்தாளர்களை ஊக்குவிக்க மாதாந்திர போட்டிகளை நடத்த தகுந்த முயற்சிகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் ....


மேலும் புதிதாக எழுத்து தளத்தினை பயன்படுத்தும் எழுத்தாளர்களுக்கு பயன்படும் வகையில் புதிய படைப்புகளை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும் , புள்ளிகள் என்பது என்ன? மற்றவர்களின் படைப்புகளுக்கு எவ்வாறு புள்ளிகள் அழிக்க வேண்டும் , எழுத்து தளத்தில் உள்ள கேள்வி பிரிவு மற்றும் எண்ணம் பிரிவு என்றால் என்ன ? இவ்விபரங்களை கொண்ட தனி பிரிவை முகப்பு பக்கத்திலேயே இணைத்தால் அது புதியவர்களுக்கு எழுத்து தளம் மேலும் வளரவும் வழி வகுக்கும்



நாள் : 20-Jun-17, 5:34 pm
0


மேலே