எழுத்து தளத்திற்கு

எழுத்து தளத்திற்கு | கேள்வி பதில்கள் | Eluthu.com

வணக்கம் ..
என் பெயர் வீ.முத்துப்பாண்டி ..நான் கடந்த ஒரு வருடமாக இத்தளத்தில் கவிதைகள் எழுதி வருகிறேன் ..சில சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்க்காய் சில கேள்விகள்

1 .) புள்ளிகள் என்பது என்ன அது எதற்கு தரப்படுகிறது ? பார்த்தவர்கள் என்பது முகப்பு பக்கத்தை பார்த்த பொதுவானவர் ,நண்பர்கள் ஆவார்கள்தானே ?

2 .) பொதுவாக நாம் எழுதும் கவிதைகளை எனது friends list என்று இருக்குமே அவர்கள் மட்டும்தான் பார்க்கமுடியுமா ?

3 .) ஒரு கவிதைக்கு கருத்து பதிவிடும்போது ,அல்லது பகிரப்படும்போதோ மட்டுமே நண்பர்களின் நண்பர்கள் பார்க்க வாய்ப்பு இருக்கிறது அப்படித்தானே ?

4 .) நண்பர்கள் அல்லாத பட்சத்தில் வேறு ஒருவர் அதாவது public பொதுவானவர் .(.எழுத்து தள உறுப்பினர்) பார்க்க வாய்ப்பு இல்லையா ?

5 )சிறந்த கவிதை எப்படி தேர்ந்து எடுக்கப்படுகிறது ? பார்த்தவர்கள் எண்ணிக்கையை வைத்தா ?
அதற்க்கு நட்சத்திரம் கொடுக்கப்படுமே அதை வைத்தா ? அல்லது எழுத்து தளத்தால் தேர்ந்தெடுக்க படுகிறதா ? பார்த்தவர்கள் வைத்து என்றால்,சில குறைவான பார்வை எண்ணிக்கை உடைய கவிதைகளும் சிறந்த கவிதை என தேர்ந்தெடுக்க பட்டுள்ளதே !

6 .) ஒரு கவிதையை public பகிர்ந்து உள்ளார் என வருகிறதே ...அவர் நட்பு வட்டத்தில் இல்லாதவர் தானே ..அப்படி எனில் நட்பு வட்டத்துக்குள் மட்டும் அல்லாமல் எழுத்து தள உறுப்பினர் ஆக உள்ளவர் பார்க்கிறாரா ?

7 .) அல்லது சிறந்த கவிதை என தேர்ந்தெடுக்கப்பட்டு அது மட்டுமே public பார்க்க வாய்ப்பு இருக்கிறதா ?

8 .) நண்பராய் சேர்ந்துவிட்ட ,சேர்ந்து விட்ட நிலையில் அவரை ஏதோ ஒரு காரணத்திற்க்காக block செய்வதை போல ஏதேனும் வழி இருக்கிறதா ?
9 .) சில நாட்களாக திருத்துதல் option இல் திருத்தம் செய்தல் திருத்தம் ஆவதில்லை
10 .) இந்த நிரல் பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க என்று ஒரு விளம்பரம் போல் வந்து கொண்டே இருக்கிறதே அது என்ன ?

மேலும் உலகம் முழுதும் வாழும் அத்துணை தமிழர்களுக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம் ...மிக சிறப்பாய் நம் கவிதை ,ஓவியம் ,கட்டுரை,சிறுகதை ,போன்றவற்றை பதிவிட மிக சிறப்புடன் வழிநடத்தி கொண்டிருக்கும் இத்தள நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல ..நன்றி வணக்கம் ..அன்புடன் ...வீ .முத்துப்பாண்டி ...


பதில் அளி
2 கேட்டவர் : வீ முத்துப்பாண்டி , 12-Jul-17, 10:26 am
Close (X)


மேலே