இந்த தீபாவளிக்கு நீங்கள் செய்த அல்லது செய்யப்போகும் நல்ல காரியம் என்ன?

இந்த தீபாவளிக்கு நீங்கள் செய்த அல்லது செய்யப்போகும் நல்ல காரியம் என்ன?

தீபாவளி என்றாலே மகிழ்ச்சிதான். அனால், ஒரு சிலரது வாழ்வில் தீபாவளியும் ஒரு சாதாரண நாளாக கடந்து தான் போகிறது.

என் வீட்டருகில் ஒரு குடும்பம் உள்ளது, இந்து ஆறு குழந்தைகள் இருக்கின்றனர். ரோட்டில் பிளாஸ்டிக் துணி கொண்டு செய்த வீட்டில் வசித்து வருகின்றனர்.

ஒவ்வொரு முறை நான் அவர்களை கடக்கும் போதும் மனம் ஏதோ சொல்லும். என் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அவர்களை எண்ணி அமைதி கொள்வேன்.

நானும் ஒரு மாத சம்பளம் வாங்கும் ஒரு நடுத்தர குடும்பம் தான். என்னால் அவர்களுக்கு பெரிதாக எதுவும் செய்யமுடியாது.

அனால் இந்த தீபாவளி அவர்களுக்கும் நல்ல முறையில் அமைய வேண்டும் என்று என் நண்பர்களுடன் உரையாடி அந்த சிறுவர்களுக்கு புத்தாடை மற்றும் பலகாரங்கள் வாங்கி தர முயற்சித்து வருகிறேன். நிச்சயம் அந்த முயற்சி நிறைவேறும் என்றும் நம்புகிறேன்,

இது போல உங்களால் இயன்றவற்றை தாங்களும் செய்தால், உங்களுக்கு ஏற்படும் மனதறியதிக்கு அளவே இருக்கமுடியாது.

பெரிதாக செய்ய வேண்டும் என்பதில்லை.

பசியால் இருப்பவருக்கு ஒரு வேலை சாப்பாடு வாங்கித்தரலாம்.
ஊருக்கு செல்ல காசில்லாமல் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் முதியோருக்கு டிக்கெட் வாங்கி கொடுத்து உதவலாம்.
தீபாவளி முன்னிட்டு யாரிடமும் சண்டை போடலாம் இருப்பது கூட நல்ல விஷயம் தான்.
நீங்கள் காணும் அனைவரிடமும் மகிழ்ச்சியாய் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சொல்வது கூட சுவாரஸ்யமானது தான்.

உங்கள் கருத்துகளையும் இங்கு பதிவிடவும்.



கேட்டவர் : கீத்ஸ்
நாள் : 6-Oct-17, 10:41 am
0


மேலே