காவேரி நதி நீர் பங்கீடு

உச்ச நீதி மன்றம் சொன்ன ஸ்கீம்னா என்ன???

மேலாண்மை வாரியம்னா என்ன???

வாரியத்தில் எத்தனை பேர் இருக்கணும்???

4 மாநிலத்தில் இருந்தும் உறுப்பினர் இருப்பாங்களா??
அப்படி இருந்தால் வாரியத்திற்கு உள்ளவே கர்நாடககாரன் எதிர்ப்பானே அப்ப முடிவு எப்படி எடுக்கணும்???

நீதிபதிகள் உறுப்பினரா இருப்பாங்களா? அரசியல்வாதிகளா?? அதிகாரிகளா???

வெள்ளைக்கார ஆட்சியில் இருந்தே 200 வருடங்களா இந்த பிரச்னை இருக்கே இதற்க்கு இந்த மேலாண்மை வாரியம் தீர்வாகுமா???

தற்போது நீதிமன்ற கருத்து படி (2007 தீர்ப்பு) காவேரி ஆற்றின் மொத்த நீர்ப்பிடிப்பு சராசரியாக 720 டிஎம்சி அதில் தமிழகத்திற்கு 425 டிஎம்சி இதில் 194 டிஎம்சி (2007ல் தற்போது படிப்படியாக குறைந்து 175 டிஎம்சி) போக 231 டிஎம்சி தமிழக பகுதிகளில் பெய்யும் மழையால் காவேரி ஆற்றிற்கு கிடைக்கிறது இதில் எவ்வளவு நீரை தடுப்பணை மூலம் தமிழ்நாடு சேமிக்கிறது???

வருடத்திற்கு இவ்வளவு என்று தீர்மானித்து குடுக்க சொல்ராங்களே எல்லா வருடமும் 720 டிஎம்சி அளவிற்கு மழை பெய்கிறதா???

விவசாயத்திற்க்காக என்று கர்நாடக அரசுடன் சண்டையிட்டு வாங்கும் தண்ணீர் காவேரி குடிநீர் திட்டம் என்று ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் மாவட்டங்களுக்கு எவ்வளவு செலவு செய்ய படுகிறது??? இதை மேலாண்மை வாரியம் கணக்கில் கொள்ளுமா????


இன்னும் கேள்விகள் இருக்கு இதை பற்றி இங்கு பதிவிடுபவர்கள் வந்து விளக்கம் தரவும்



கேட்டவர் : vaishu
நாள் : 30-Mar-18, 11:15 pm
0


மேலே