எழில்நீ முழுதும் சிவப்பு

ஓர் இலக்கண ஐயம் வினா :

கூவிய சேவலுக்கு கொண்டை சிவப்பு
எழும்சூ ரியனின் கதிர்கள் சிவப்பு
எழுதும் கவிஞனுக்கு நெஞ்சம் சிவப்பு
எழில்நீ முழுதும் சிவப்பு !

இது கவிதைப் பகுதியில் நான் பதிவு செய்திருக்கும்
பல்விகற்ப இன்னிசை வெண்பா.
ஈற்றுச் சீர் எல்லா அடிகளிலும் சிவப்பு என்று முடிகிறது
ஈற்றுச் சீர் நாலாவது அடியில் பிறப்பு என்ற வாய்ப்பாட்டுப் படி
குற்றியலுகரமாகக் கொண்டு நிரைபுவாக அமைக்கப்பட்டுள்ளது .

ஐயம் கேள்வி :
குற்றியலுகரம் வரும்போது புணர்ச்சிக்குப் பின்னே சீர் பிரிக்க வேண்டும் .
இரண்டாவது அடியையும் மூன்றாவது அடியையும் கவனியுங்கள் .
சிவப்பு வை கூற்றிலுகரமாகஅடுத்த அடிகளில் வரும்
முதல் சீருடன் புணரும் போது சிவப்பு + எழும் = சிவப்பெழும் என்றாகும் .

கூவிய சேவலுக்கு கொண்டை சிவப்
பெழும்சூ ரியனின் கதிர்கள் சிவப்
பெழுதும் கவிஞனுக்கு நெஞ்சம் சிவப்
பெழில்நீ முழுதும் சிவப்பு

இப்படி எழுதும் போது மூன்று அடிகளும் சிவ சிவ ஒற்றை அசையில்
தவம் கிடக்கிறது . தளை தட்டி நிற்கிறது .
எது சரி ? முன் வழியா பின் வழிய ?கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 25-Apr-19, 10:24 am
0


மேலே