உணர்வு என்றால் என்ன ?

'உணர்ச்சி'

'உணர்வுகள் என்பது ஒரு நிகழ்வு முடிந்தபின் உணர்வு ரீதியாகத் தோன்றும் நிலைமையின் அகநிலை அனுபவம்' என்கிறது வலைத்தளம்.

ஆனால் ' உணர்ச்சி என்பது புலன்களின் தூண்டுதலால் அகநிலை அனுபவம்' என்கிறது என் சிற்றறிவு.

உதாரணமாக ஒரு பாடல் முதல் முறை செவியால் கேட்டு மனதின் ஆனந்த நிலையால் கண்கள் ஈரமானால் அது ஆனந்த கண்ணீர்.(உணர்ச்சி ).அதே பாடலை மீண்டும் மீண்டும் கேட்க்கும் பொழுது ஒவ்வொரு முறையும் கண்கள் ஈரமாவதில்லை.
தேன் முறுக்கை சுவைத்து முடிய மனதில் ஏற்படும் இன்ப உணர்ச்சி போல்,
பத்து தேன் முறுக்கை தொடர்ந்து சுவைத்தால் இந்த தேனின் இன்பமும் தெவிட்டிவிடுவது போல் உணர்ச்சி தெவிட்டவல்லது.
துணையை இழந்த பின்னரும் , காதல் திருமண பந்தத்தில் சேராமல் இருக்கும் சந்தர்ப்பத்திலும் இதய கோயிலில் வாழும் 'காதல்' உணர்வு மிக்கதாக தன்னை பறைசாற்ற, தாஜ்மஹால் சான்றாக; தொடரும் பாலியல் துஸ்பிரயோகங்களும் மலிந்துபோய் உள்ள கருச்சிதைவுகலாலும் ( காமத்தால் விளைந்த வேண்டாத கரு )காமம் உணர்ச்சி மிக்க செயலாக தன்னை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

காதலை , தேசப்பற்றை ,பக்தி பரவச நிலையை உள்ளுணர்வுடன் தொடர்பு படுத்தலாமா?
உள்ளுணர்வு instinct என்றால் உணர்வு என்பதன் ஆங்கில பதம் யாதோ?



~ நியதி ~



நாள் : 15-Jun-19, 10:10 pm
0


மேலே