மது

மது அருந்துபவர்கள் பொதுவாக ஏதேனும் ஒரு காரணம் சொல்வார்கள்

எ:கா
1)பிறந்த நாள் கொண்டாட்டமாக
2)இறந்த துக்கம் தாளாமல்

3)கடின உழைப்பு
4)விடுப்பு தினம்

5)காதலில் வெற்றி
6)காதலில் தோல்வி

இன்னும் பல

இதில் ஏழை பணக்காரன் என்ற வித்யாசங்கள் இருப்பது இல்லை

இதில் படித்தவன் படிக்காதவன் வேறுபாடு இருப்பது இல்லை

மது உடலுக்கும்,அதனால் ஏற்படும் போதை உள்ளத்திற்கும் முற்றிலும் நஞ்சு என்பதை அனைவரும் அறிவோம்

இதை நன்கு உணர்ந்த,உணர்த்த வேண்டிய நமது அரசாங்கம்

இதை முற்றிவும் ஒழிக்க வேண்டி பாடு படாமல்

மதுக்கடைகளை தானே முன்வந்து விநியோகித்து வளர்த்து கொண்டு இருப்பது என்பது

1)நாம் முட்டாள்கள் என்பதாலா?
2)மக்கள் தொகையை குறைக்கவா?
3)தான் செய்யும் ஊழல்களை போதை ஏற்றி மறைக்கவா?
4)குற்றங்களை பெருக்கவா?
5)வருங்கால குடிமகன் உண்மையான குடிமகனாகவே இருக்க வேண்டும் என்பதாலா?

இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா?

சரி சரி நம்மில் எத்தனை பேர் மது அருந்தாமல்
இருக்கிறோம்

மது அருந்தும்,அருந்தாத இருவரின் பதில்களும்
எதிர் பார்க்கிறேன்

அன்புடன் நவீன் மென்மையானவன்



கேட்டவர் : a.n.naveen soft
நாள் : 12-Jun-13, 8:22 am
0


மேலே