ராபின்சன் குரூசோ

(Tamil Nool / Book Vimarsanam)

ராபின்சன் குரூசோ

ராபின்சன் குரூசோ விமர்சனம். Tamil Books Review
பொதுவாகவே மொழிபெயர்ப்பு கதைகள் நம்மிடத்தில் புதிய அனுபவத்தை பண்பாட்டை அறிமுகப்படுத்தும். அந்த வகையில் தொ.மு.சி.ரகுநாதன் தமிழ்ப்படுத்தியிருக்கும் 'ராபின்சன் குரூசோ' புதுவிதமான அனுப்பவத்தை என்னிடத்தில் பதியவைத்துச் சென்றிருக்கிறது. கடற்பயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் ராபின்சன் குரூசோ இளம் வயதில் பெற்றோரை விட்டு வணிகர்கள் பதின்மரோடு இணைந்து கடல் கடந்து செல்கிறார். அப்போது ஏற்பட்ட இயற்கை சீற்றத்தினால் கப்பலோடு கடலில் தத்தளிக்கிறார். மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு யாருமற்ற தீவொன்றை உயிரோடு சென்று சேர்கிறார். இவ்வளவு பெரிய சீற்றத்திற்குப் பிறகும் தான் உயிர் பிழைத்திருப்பதால் இவ்வுலகில் தனக்கான கடமை ஏதோ மிச்சமிருப்பதாக எண்ணி அந்த தீவையே தனக்கான உலகமாக உருவகித்துக் கொள்கிறார். நரமாமிசம் உண்ணும் ஆப்பிரிக்க இனத்தவர்களுள் ஒருவன் வழி தடுமாறி குரூசோவை சென்றடைகிறான். அவன் வெள்ளிக்கிழமையில் தன்னிடம் வந்ததால் அவனுக்கு ஃபிரைடே எனப் பெயரிடுகிறார் குரூசோ. அவனுடைய நரமாமிசம் உண்ணும் பழக்கத்தை குரூசோ பக்குவமான புரிதலோடு ஒழிக்கவே ஃபிரைடே குரூசோவை தனது தலைவனாக ஏற்று அடிப்பணிகிறான். பின்னர் உரிய காலம் எட்டவே இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது தீவுலக வாழ்வை விடுத்து தனது சொந்த நாடான இங்கிலாந்திற்கு ஃபிரைடேவையும் அழைத்துச் சென்று வாழ்வை மீட்டெடுக்கிறார் குரூசோ.
ராபின்சன் குரூசோவின் தீவுலக வாழ்வை டானியல் டிஃபோ விடமிருந்து மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார் தொ.மு.சி. கதையை சலிப்பின்றி நகர்த்திச் செல்லுதலில் வாசகர் மெச்சவில்லை என்றால் தான் ஆச்சரியம்.
நூல்:ராபின்சன் குரூசோ
ஆசிரியர்:டானியல் டிஃபோ
தமிழில்:தொ.மு.சி.ரகுநாதன்

சேர்த்தவர் : Priyadharshini
நாள் : 11-Mar-20, 11:59 am

ராபின்சன் குரூசோ தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே